வாக்காளர்களை அவமதித்ததாக எம்.பி. மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை, சைதாப்பேட்டை தொகுதி வாக்காளர்களை அவமதித்து விட்டதாக தமிழ் மாநில காங்கிரஸ் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் மீது வழக்குதொடரப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் 32 ஆயிரம் போலி வாக்காளர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர் என்று ஒருகுற்றச்சாட்டை பீட்டர் அல்போன்ஸ் எம்.பி, பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

இது குறித்து சைதாப்பேட்டையில் வசிக்கும் தென்னிந்திய முஸ்லிம் கல்வி கழகத்தின் உறுப்பினர் அப்துல் அலீம் என்பவரும், அகில இந்திய அம்பேத்கார்இயக்கத்தின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளருமான அம்பேத்கார் தாஸன் என்பவரும் சைதாப்பேட்டை 9-வது மாநகர குற்றவியல்நீதிமன்றத்தில் பீட்டர் அல்போன்ஸ் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

தற்பொழுது அடையாள அட்டை பெற்று வாக்களிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும்வாக்களிக்கும் உரிமை பெற்று வாக்களிப்பது பெருமையும், கடமையுமாகும். ஆனால், இதை பீட்டர் அல்போன்ஸ் எம்.பி கூறியிருப்பது உண்மைக்குமாறானது மட்டுமல்ல, அடிப்படை ஆதாரமற்றதும் கூட.

இது சைதாப்பேட்டை வாக்காளர்களை பெரிதும் பாதித்துள்ளது மட்டுமல்ல, வாக்காளர்களை பீட்டர் அல்போன்ஸ் அவமதித்துள்ளார். எனவே அவரைதண்டிக்க வேண்டும் என்று கூறி அவர்கள் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளார்.

இது குறித்து நீதிமன்றதில் அவர்கள் தனித்தனியாக கொடுத்த மனுக்களை நீதிபதி ராமசாமி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+