இஸ்ரேல் தாக்குதல் தீவிரமாகிறது
ஜெருசலேம் :
இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும், பாலஸ்தீன ராணுவ வீரர்களுக்குமிடையே செவ்வாய்க்கிழமை அதிகாலை மீண்டும் கடும் சண்டை மூண்டது.
யூதர்கள் வசிக்கும் பகுதியில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பஸ்சில் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 பேர்இறந்தனர். இதைத் தொடர்ந்து பாலஸ்தீனிய நகரான காஸா நகர் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டது.
செவ்வாய்க்கிழமையும்இத்தாக்குதல் தொடர்ந்தது.இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ராணுவ வீரர்களுக்கிடையே மீண்டும் சண்டைஆரம்பமானது. மேற்கு கரையின் ரமல்லா மற்றும் ஹெப்ரான் பகுதிகளில் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
கடந்த இரண்டு மாதமாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ராணுவ வீரர்களுக்கிடையே நடந்து வரும் சண்டையில் இதுவரை 245 பேர்கொல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பாலஸ்தீனியர்கள்.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கூறுகையில், காசா பகுதியில் சென்று கொண்டிருந்த பஸ் குண்டு வீசித் தாக்கப்பட்டது. இதில் இஸ்ரேலைச் சேர்ந்த ஒருஆணும், பெண்ணும் கொல்லப்பட்டனர். 4 பள்ளிக் குழந்தைகள் காயமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ஏவுகணைத்தாக்குதலைத் தொடங்கியது என்றனர்.
அமெரிக்கா கண்டனம்:
பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம்தெரிவித்துள்ளது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் க்ரெளலே கூறுகையில் பள்ளிக் குழந்தைகள் சென்ற பஸ் தாக்கப்பட்டது தீவிரவாதச் செயலாகும்என்று கூறியுள்ளார்.
முன்னதாக, காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய ஏவுகனைத் தாக்குதலில் கடற்படை அலுவலகங்கள், சிவில் மற்றும் பாதுகாப்புத் துறை கட்டிடங்கள்,போலீஸ் நிலையங்கள் ஆகியவை சேதமடைந்தன.
5 க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் மூலம் பாலஸ்தீன பாதுகாப்பு வீரர்கள் மற்றும் தகவல் தொடர்பு மையம் ஆகியவற்றை இஸ்ரேல் ராணுவவீரர்கள் தாக்கியதாகவும், இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. யாசர் அராபத்தின் கட்சித் தலைமையகம் மீதும் தாக்குதல் நடந்தது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications