காஷ்மீரில் ஒரு ஆண்டில் 1499 தீவிரவாதிகள் பலி
டெல்லி:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஆண்டு 1499 தீவிரவாதிகள்கொல்லப்பட்டுள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானிகூறியுள்ளார்.
லோக் சபாவில் செவ்வாய்க்கிழமை கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம்அவர் அளித்த பதில் வருமாறு:
ஜம்மு - காஷ்மீரில் வன்முறையை ஒடுக்குவதில் உளவுத் துறை தோல்விஅடைந்துள்ளது என்பது தவறான செய்தி. பாதுகாப்புப் படை வீரர்களின் ஒத்துழைத்துவன்முறையை அடக்குவதில் உளவுத் துறை வெற்றி பெற்றுள்ளது.
தீவிரவாதத்தை ஒடுக்கும் ராணுவ தந்திரம்,யுத்த தந்திரம் அனைத்தும் பலநிலைகளிலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. ராணுவ தலைமையகத்திற்கும்உளவுத்துறை அதிகாரிகளுக்கும் இதுதொடர்பாக நல்ல புரிந்து கொள்ளுதல் உள்ளது.
1999-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை 1,499தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதே காலக்கட்டத்தில் 408 பாதுகாப்புப் படைவீரர்களும், 689 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
எல்லாத் தரப்பு மக்களும் வன்முறையை கைவிட்டு அமைதிப் பாதைக்குதிரும்புமாறும், ரம்ஜான் மாதத்தில் துப்பாக்கி சண்டை எதிலும் ஈடுபட வேண்டாம்எனவும் பாதுகாப்புப் படைக்கு அரசு கோரிக்கை விடுத்துள்ளது என்றார் அத்வானி.
ஐ.எஸ்.ஐ. நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர்வித்யாசாகர் ராவ் பதிலளிக்கையில், பாகிஸ்தான் உளவுப்படையான ஐ.எஸ்.ஐ. தான்வெளிநாட்டு தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பி வைக்கிறது.
1999-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி வரை 173 ஆப்கான்தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்னர். இதே சமயத்தில் 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றார்.
யு.என்.ஐ.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications