அகதிகள் வந்த படகு கடலில் கவிழ்ந்தது
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை அகதிகள் படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. அதில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாகத் தப்பித்தனர்.
இலங்கை தாவுப்பாடு என்ற இடத்தில் 8 அகதிகளை ஏற்றிக் கொண்டு ஒரு படகு ராமேஸ்வரம் புறப்பட்டது. அதில் இருந்த அகதிகள் மன்னார்மாவட்டம் சின்னக்கடை, முருங்கன் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
படகில் சேகர், அவரது மனைவி கலா, அவர்களது 7 மாத கைக்குழந்தை சிந்துசன் மற்றும் நாகராஜன், சிவகணபதி, வீராசாமி, சிவரூபன், தில்லைசெல்விஆகியோர் இருந்தனர். படகை 2 பேர் ஓட்டி வந்தனர்.
அந்தப் படகு தனுஷ்கோடி அருகே வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த ராட்சச அலையை சமாளிக்க முடியாமல் கவிழ்ந்தது. இதனால் படகில்இருந்தவர்கள் கரையேற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர். படகு ஓட்டி வந்த 2 பேரும் கவிழந்த படகை நிமிர்த்தி சரி செய்தனர்.
உயிர்தப்பிய அகதிகள் படகு மூலம் தனுஷ்கோடியில் உள்ள கம்பிபாடு என்ற இடத்தில் வந்து இறங்கினார்கள். படகு கரை சேர்ந்ததும் அதனை ஓட்டிவந்த 2 பேரும் படகை விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். அகதிகளை தனுஷ்கோடி எஸ்.ஐ.மாரியப்பன் விசாரணை நடத்தினார். பின்னர் அவர்கள் மண்டபம்முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications