குரல் இல்லாமல் திணறும் பா.ஜ.க.
டெல்லி:
சரியான "குரல் இல்லாமல், இந்தியாவின் ஆளும் கட்சி திணறுகிறது.
பாரதீய ஜனதாக் கட்சியின் பல செய்தித் தொடர்பாளர்கள் இன்று மத்தியஅமைச்சர்களாகி விட்டனர்.கடைசியாக வெங்கையா நாயுடுவும் அமைச்சராகிவிட்டார்.
இதனால் நல்ல செய்தித் தொடர்பாளரைத் தேட வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளதுபா.ஜ.க. கட்சியின் செய்திகள், தகவல்கள், அறிவிப்புகளை பத்திரிகைகள் மற்றும்மக்களிடம் சரியாகச் சொல்ல நல்ல, செய்தித் தொடர்பாளர் அணியைத் தேடிக்கொண்டிருக்கிறது பா.ஜ.க.
இதுவரை செய்தித் தொடர்பாளர்களாக சிறப்பாக செயல்பட்டு வந்த பிரமோத்மகாஜன், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு ஆகியோர் மிகவும்சிறப்பாக செயல்பட்டு கட்சிக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தனர்.
பா.ஜ.க.வின் குரல் பலவீனமாக உள்ள நிலையில், காங்கிரஸ் குரல், நல்ல தெம்பாகஇருக்கிறது. மார்கரட் ஆல்வா, அனில் சாஸ்திரி, அம்பிகா சோனி, குலாம் நபி ஆசாத்என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் வரிசை பெரிதாக உள்ளது.
தற்போது நாடாளுமன்றம் நடந்து கொண்டிருப்பதால், உடனடியாக நல்லசெய்தித்தொடர்பாளரைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசரத்தில் உள்ளது பா.ஜ.க.
கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளராக துணைத் தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி உள்ளார். ஆனால் இவர், நாடாளுமன்றத்தின் எந்த சபையிலும்உறுப்பினராக இல்லை. எனவே நாடாளுமன்ற விவாதங்கள் குறித்து ஜனாவைவிளக்கச் சொல்வது சரியாக இருக்காது என்று பா.ஜ.க. கருதுகிறது.
தற்போதைய சூழ்நிலையில் அடுத்த செய்தித்தொடர்பாளராக ஆகும் வாய்ப்பபுரவிசங்கர் பிரசாத் அல்லது விஜய்குமார் மல்ஹோத்ரா ஆகியோரில் ஒருவருக்குக்கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவருமே நல்ல பேச்சாளர்கள்.
பொறுத்திருந்து பார்ப்போம், அடுத்த குரலை.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications