வீரப்பன் காட்டில் சிக்கிய சி.டி. கேசட்கள்
ஈரோடு:
அதிரடிப் படையின் முதல் நடவடிக்கையில், திம்பம் வனப் பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றிலிருந்து ஏராளமான சிடி கேஸட்டுக்கள், மருந்துப் பொருட்கள் கிடைத்துள்ளன.
வீரப்பனைப் பிடிப்பதற்காக தமிழக, கர்நாடக அதிரடிப் படை போலீஸார் செவ்வாய்க்கிழமை காலை திம்பம் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.
பண்ணாரியிலிருந்து திம்பம் செல்லும் வனப்பகுதியில் தனியார் கல் குவாரிகள் உள்ளன. இந்தக் கல்குவாரி ஒன்றில் அதிரடிப் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு ஏராளமான வெடிப்பொருட்கள், சிடி கேசட்டுக்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் பெருமளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அதிரடிப்படைப் போலீஸார் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே வீரப்பன் தங்கியுள்ள காட்டிற்குப் பெருமளவில் வெடிப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்திச் செல்லபபட்டிருப்பதாக உளவுத்துறைபோலீஸார் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில் வனப்பகுதியில் வெடிப்பொருட்கள் மற்றும் சிடி கேசட்டுக்கள் கிடைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிரடிப்படைக்கு ஆயுதங்கள்:
இதற்கிடையே, தமிழக அதிரடிப்படைக்குத் தேவையான ஆயுதங்கள், கையெறி குண்டுகள் மற்றும் ஒயர்லெஸ் கருவிகள் போன்றவை அனுப்பிவைக்கப்படுகின்றன.
சென்னையிலிருந்து இவை விசேஷ பாதுகாப்புடன் அனுப்பப்படுகின்றன. ஏகே 47 ரக துப்பாக்கிகள், பெட்டி பெட்டியாக கையெறி குண்டுகள் மற்றும்அதிரடிப்படையினர் பயன்படுத்துவதற்காக ஒயர்லெஸ் கருவிகள், இரவில் பார்க்கும் பைனாகுலர்கள் ஆகியவை சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன.
இரண்டு வேன்கள் நிறைய ஆயுதங்களும், கருவிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிரடிப்படை முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications