மீண்டும் "டாக்டர் ஆனார் அப்துல் கலாம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
இந்திய ஏவுகனைத் திட்ட தந்தை என அழைக்கப்படும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் புதன்கிழமை கெளரவ டாக்டர் பட்டம்வழங்கியது.
தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பாத்திமா பீவி பட்டத்தைவழங்கினார். பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழாவின்போது கலாமுக்குடாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
பல்கலைக்கழக துணைவேந்தர் சாலிஹு பாராட்டுப் பத்திரத்தை வாசித்தளித்தார்.ஒரிசா மாநில ஆளுநர் எம்.எம்.ராஜேந்திரன் பட்டமளிப்பு விழா சிறப்புரைநிகழ்த்தினார்.
மொத்தம் 59 மாணவர்களுக்கு நேரடியாக பட்டங்கள் வழங்கப்பட்டன. மொத்தம்36,507 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இவர்கள் தபால் மூலம் பட்டங்களைப்பெற்றுக் கொண்டனர்.
இவை தவிர, 72 மாணவ, மாணவியருக்கு சிறப்புப் பதக்கங்களும், பரிசுகளும்வழங்கப்பட்டன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications