அல் கோருக்கு சாதகமாக அமெரிக்க கோர்ட் தீர்ப்பு
வாஷிங்க்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் புளோரிடா மாநிலத்தில் கையால் எண்ணப்பட்ட வாக்குகளையும், ஏற்கனவே எண்ணப்பட்ட வாக்குகளுடன் சேர்த்துக்கொள்ளலாம் என்று புளோரிடா சுப்ரீம் கோர்ட் புதன்கிழமை கூறியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்தத் தீர்ப்பு ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல்கோருக்குக் கிடைத்த மிகப் பெரியாக வெற்றியாக கருதப்படுகிறது. அனைத்து ஓட்டுஎண்ணிக்கையும் சரி பார்க்கப்பட்டு நவம்பர் 26 ம் தேதியுடன் அமெரிக்க ஜனாதிபதி யார் என்ற முடிவு வெளியிடப்படும்.
புளோரிடா மாநிலத்தில் 25 எலக்டோரல் பிரதிநிதிகள் வாக்குகள் உள்ளன. இந்த மாநிலத்தில் நடந்த வாக்கு எண்ணிக்கையில் குறைந்த அளவேவித்தியாசம் இருந்ததால், மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டது. பின்னர் கையால் வாக்குகளை எண்ண உத்தரவிடப்பட்டது.
ஆனால் கையால் வாக்குகளை எண்ணியதை கணக்கில் சேர்க்க முடியாது என்று மாநிலத் தேர்தல் அதிகாரி கேத்தரீன் ஹாரிஸ் கூறி விட்டார். இதையடுத்துஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல் கோர் புளோரிடா சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து அல் கோருக்கு எதிராக டெக்ஸாஸ்மாநில கவர்னரும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான ஜார்ஜ் புஷ் ஜூனியர் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த 8 பேர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் 42 பக்கத் தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பில், தேர்தல் ஆணையரும், அமைச்சருமான கேத்தரின்ஹாரிஸ் கையால் எண்ணப்பட்ட வாக்குகளை, மொத்த வாக்குகள் எண்ணிக்கையுடன் சேர்க்க உத்தரவிட வேண்டும். மக்கள் வாக்களித்த ஓட்டுக்கள்தான்முக்கியம். அதை விட மற்றவை பெரிதல்ல என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்தத் தீர்ப்பு குறித்து, ஜார்ஜ் புஷ் தரப்பிலிருந்து எந்த விதமான கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையே, புளோரிடா தீர்ப்பைஎதிர்த்து அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்த நிலையில் புளோரிடா சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் மூலம் அல் கோரின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. தற்போது புஷ் 930 வாக்குகளேஅதிகம் பெற்று முன்னணியில் உள்ளார். ஆனால் புளோரிடா மாநிலத்தின் மேலும் 3 கவுன்டிகளில் கையால் வாக்குகளை எண்ணும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது. அதில் அல் கோருக்கு சாதகமாக முடிவுகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கவுன்டிகளில் அல்கோரின் ஜனநாயகக் கட்சிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. ஆனால் இங்கு கையால் வாக்குகளை எண்ணுவதற்கு புஷ் தரப்பு எதிர்ப்புதெரிவித்துள்ளது. இப்படி எண்ணுவது நியாயமல்ல என்று அது கூறியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications