உதய சூரியனுக்காக ஒரு தாமரை யாத்திரை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க ஆட்சி அமையவேண்டும் என்பதற்காகவே தாமரையாத்திரை நடத்தப்படுகிறது என்று அக்கட்சியின் செயலாளர் இல.கணேசன்அறிவித்துள்ளார்.

தமிழக பாரதீய ஜனாக் கட்சி பொதுச்செயலாளர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் , நல்லாட்சிக்கு ஆதரவு கோரி தாமரை ரத யாத்திரைதமிழகத்தின் நான்கு மூலைகளிலிருந்தும் புறப்பட்டு பவனி வந்து கொண்டிருக்கிறது.

மத்தியில் வாஜ்பாய் தலைமையில் நடைபெறும் நல்லாட்சியின் சாதனைகளை விளக்கி மக்கள் ஆதரவினைக் கோரும் வகையில் இந்த யாத்திரை நடைபெற்றுவருகிறது.

13 நாட்கள், அதன் பிறகு 13 மாதம் பிரதமராக இருந்த போது வாஜ்பாய் செய்த சாதனைகளைவிட கடந்த ஓராண்டு சாதனைகள் அதிகம். அதற்குக்காரணம் தற்பொழுதைய மத்திய அரசு நல்லாட்சி அரசாக, நிலையான ஆட்சி தரும் அரசாக இருப்பதோடு நிம்மதியான ஆட்சியும் நடந்து வருகிறது.

சென்ற முறை வாஜ்பாய் 13 மாதங்கள் பிரமராக இருந்த பொழுது தினசரி அறிக்கைகள், கண்டனங்கள் , மிரட்டல்கள் அ.தி.மு.க. தரப்பிலிருந்து எழுந்தது.ஒரு நாள் கூட வாஜ்பாய் நிம்மதியாக இருந்ததில்லை. ஆனால் கடந்த ஓராண்டில் கலைஞர் கருணாநிதியை சமாதானப்படுத்த வாஜ்பாய் தூதரை அனுப்பினார்.என ஒரு நாள் கூட செய்தி வந்ததில்லை.

இந்த மாற்றத்தின் காரணமாகத்தான் மத்தியில் வாஜ்பாயால் நிம்மதியாக ஆட்சி நடத்த முடிகிறது. இந்த நிம்மதி தொடர வேண்டும். 2001-ம் ஆண்டுசட்டமன்றத் தேர்தலுக்கு பின்பும் தமிழகத்தில் வாஜ்பாய் அரசுக்கு உறுதுணையாக ஒரு அரசே நீடிக்கிற வகையில் வாக்களிக்க வேண்டும் எனவேண்டுகோள் விடுவதற்கும் இந்த தாமரை யாத்திரை நடைபெறுகிறது என்று இல.கணேசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+