இந்தியர்கள் உள்ளிட்ட 43 வெளிநாட்டினர் இங்கிலாந்தில் கைது
லண்டன்:
தெற்கு இங்கிலாந்திலுள்ள கென்ட் துறைமுகத்தில் ஜெர்மன் நாட்டுப் பதிவு எண் கொண்ட டிரக் மூலம், அனுமதியின்றி இங்கிலாந்திற்குள் நுழைய முயன்றஇந்தியர்கள் உள்ளிட்ட 43 வெளி நாட்டவர்கள் பிடிபட்டனர்.
அனைவரும் 8 நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 3 பேர் பெண்கள், ஒரு குழந்தை, 11 இளைஞர்கள் மற்றும் 28 பேர் ஆண்கள். அனைவரும் இந்தியா,நேபாளம், செசன்யா, துருக்கி, ஈராக், ஈரான், கோசாவோ மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
போலீஸார் இவர்கள் அனைவரையும் கைது செய்து, டோவர் பகுதியில் உள்ள விசாரணை அலுவலகத்திற்குக் சென்றனர். இவர்கள் வந்த டிரக் ஜெர்மன்நாட்டுப் பதிவு எண் கொண்டது எனக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் டிரக்கை ஓட்டி வந்தவரும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவரே. 43 பேரும் கைதுசெய்யவில்லை என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம், கென்ட் துறைமுகத்தில் டிரக்கில் இறந்த நிலையில், 58 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது நினைவிருக்கலாம். அவர்கள்அனைவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள்.
இங்கிலாந்து போலீஸார் தங்கள் நாட்டுக்குள் நுழையும் பிற நாட்டு வாகனங்களை சோதனையிடும் பணியைத் தீவிரப் படுத்தியுள்ளனர். குறிப்பாகஅனுமதியில்லாமல் நுழையும் வாகனங்களுக்கு அபாரதத் தொகையை அதிகரித்துள்ளனர்.
யு.என்.ஐ.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications