எகிப்து துப்பாக்கி சண்டையில் 10 பேர் சாவு
கெய்ரோ:
எகிப்து நாட்டின் மராஹா நகரில் துப்பாக்கி முனையில் வங்கியைக் கொள்ளையடித்த 4பேர் கொண்ட கும்பலுக்கும், காவலர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 2கொள்ளையர்கள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.
மராஹா நகரில் நான்கு பேர் அடங்கிய ஒரு கும்பல் ஒரு காரில், நவீன ரகதுப்பாகிகளுடன் வந்து கொண்டிருந்தது. ஒரு சதுக்கம் அருகே வந்தபோது, அங்கிருந்தவங்கி ஒன்றுக்குள் நுழைய முயன்றனர். ஆனால் இவர்களைப் பார்த்ததும் வங்கிக்காவலர்கள், கதவை மூடி விட்டனர்.
இதையடுத்து அக்கும்பல் காரிலிருந்து இறங்கி துப்பாக்கியால் சுட்டது. இதில் ஒருபோலீஸ்காரரும், 2 பாதசாரிகளும் உயிரிழந்தனர்.
பின்னர் அருகிலிருந்த எகிப்து தேசிய வங்கிக்குள் இக்கும்பல் புகுந்தது. அங்குநுழைந்ததும் சரமாரியாக சுட்டனர். இதில், 2 போலீஸ்காரர்கள், 2 வங்கி ஊழியர்கள்இறந்தனர். காவலர்கள் திருப்பிச் சுட்டதில் 2 கொள்ளையர்கள் இறந்தனர்.
7 பேர் காயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் ஒருவர்பின்னர் இறந்தார். உயிர் தப்பிய 2 கொள்ளையர்களும் வங்கியிலிருந்து சிறிதுபணத்தை எடுத்துக் கொண்டு தப்பினர். அவர்கள் எவ்வளவு பணத்தைக்கொள்ளையடித்துக் கொண்டு தப்பினார்கள் என்று தெரியவில்லை.
துப்பாக்கிக் கும்பல் யார் என்று தெரியவில்லை. தப்பி ஓடியவர்களை போலீஸார் தேடிவருகின்றனர். அவர்கள் முஸ்லீம் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்றுசந்தேகிக்கப்படுகிறது.
எகிப்தில் முஸ்லீம் தீவிரவாதிகள் அடிக்கடி வங்கிகள் மற்றும் நகைக் கடைகளில்கொள்ளையடித்துச் செல்வது வழக்கமான ஒன்றுதான். இருப்பினும் கடந்த 3ஆண்டுகளாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருந்து வந்தது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications