இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிஷன் சிங் பேடி வாழ்த்து
டெல்லி:
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நிச்சயம், மகளிர் உலகக் கோப்பையை வெல்லும்என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர் பிஷன் சிங் பேடி நம்பிக்கைதெரிவித்துள்ளார்.
மகளிர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி அடுத்த வாரம் நியூசிலாந்தில்துவங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துத்தெரிவிக்கும் வகையிலான குட்லக் பேனர் இந்திய மகளிர் அணியிடம் வழங்கும்நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேடி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,ஆடவர் அணியை விட மகளிர் அணி மிகச் சிறப்பாக விளையாடும் என்ற நம்பிக்கைஎனக்கு உண்டு.
இந்திய மகளிர் அணி மிக சிறப்பாக உள்ளது. அவர்களிடம் நல்ல திறமை உள்ளது.தங்களது சொந்த முயற்சியாலும், கடும் உழைப்பாலும் இந்த அணி உருவாகியுள்ளது.இவர்கள் நிச்சயம் உலகக் கோப்பையை வெல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குஉள்ளது என்றார் பேடி.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அணி கேப்டன் அஞ்சு ஜெயினிடம் குட்லக் பேனரைக்கொடுத்த டெல்லி போலீஸ் பயிற்சிக் கழக இயக்குநர் கிரன் பேடி கூறுகையில்,உங்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். என்ன கிடைக்கும் என்றுஎதிர்பார்க்காமல் சிறப்பாக விளையாடுங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றார்.
இந்திய மகளிர் அணி, வியாழக்கிழமை நியூசிலாந்துசெல்கிறது. நவம்பர் 29-ம் தேதிபோட்டிகள் துவங்குகின்றன. இதுவரை ஆஸ்திரேலியா நான்கு முறை உலகக்கோப்பையை வென்றுள்ளன. இங்கிலாந்து 2 முறை கோப்பையை வென்றுள்ளன.
அணி விவரம்: அஞ்சு ஜெயின் (கேப்டன்), அஞ்சும் சோப்ரா (துணை கேப்டன்),பூர்னிமா ராவ், சந்திரகாந்தா, மித்தாலி ராஜ், ஹேமலதா கலா, கல்யாணி உம்ராங்கோர்,ரூபாஞ்சலி சாஸ்திரி, தீபா குல்கர்னி, நீத்து டேவிட், ரேனு மார்கரட், சுனிதா கனூஜியா,கவிதா ராய், சமீதா ஹரிகிருஷ்ணா, அருந்ததி, சுதா ஷா (பயிற்சியாளர்), சுக்வீந்தர்பாவா (உதவி பயிற்சியாளர்).
யு.என்.ஐ.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications