இஸ்ரேலுக்கான தூதர்களை எகிப்து, ஜோர்டான் திரும்பப் பெற்றன
ஜெருசேலம்:
பாலஸ்தீனர்கள் மீது நடத்தி வரும் கடும் தாக்குதலைக் கண்டித்து இஸ்ரேலுக்கானதங்களது தூதர்களை எகிப்து மற்றும் ஜோர்டான் நாடுகள் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளன.
எகிப்தின் முடிவு இஸ்ரேலுக்கு பெரும் அடியாக அமையும் என்று அரசியல்வட்டாரத்தில் கூறப்படுகிறது. எகிப்தின் முடிவு வருத்தம் தரக் கூடியது என்று இஸ்ரேல்பிரதமர் எஹூத் பாரக் கருத்துத் தெரிவித்துள்ளார். இருப்பினும் இதனால் பெரும்விளைவுகள் ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.
காஸா முனையில் உள்ள இஸ்ரேல் ராணுவ முகாமுக்கு வந்த அவர் கூறுகையில்,உடனடியாக இப்போதைக்கு எந்த விளைவும் எகிப்து முடிவால் ஏற்பட்டு விடாது.விரைவில் இந்தப் பிரச்சினை தீரும் என்று நம்புகிறேன்.
மத்திய கிழக்குப் பிரச்சினையில் தொடர்ந்து ஈடுபடும் வாய்ப்பை எகிப்து இதன் மூலம்இழக்கும் என்று கூறிக் கொள்ள விரும்புகிறேன். டெல் அவிவிலிருந்து வாபஸ்பெறப்பட்ட எகிப்து தூதர் மீண்டும் பணிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கிறோம்என்றார்.
இஸ்ரேலின் அண்டை நாடுகளில் முக்கியானது எகிப்து. பாலஸ்தீனத்திற்கும்,இஸ்ரேலுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வருவதற்கு முக்கியக்காரணகர்த்தாக்களில் ஒன்று எகிப்து என்பதால், மத்திய கிழக்குப் பிரச்சினைதீவிரமாகும் என்று கருதப்படுகிறது.
1979-ம் ஆண்டு இஸ்ரேலுடன், எகிப்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்ட முதல் நாடு எகிப்து என்பதுகுறிப்பிடத்தக்கது.
மற்றொரு முக்கிய நாடான ஜோர்டானும் தனது தூதரை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளது. இஸ்ரேலுடன் நடந்த நான்கு போர்களுக்குப் பிறகு எகிப்தும்,ஜோர்டானும் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டன.
ஜோர்டானும் வாபஸ்:
எகிப்தின் முடிவைப் பின்பற்றி ஜோர்டானும் தனது இஸ்ரேல் தூதரை வாபஸ்பெறுவதாக அறிவித்துள்ளது. தலைநகர் அம்மானில் நடந்த உயர் மட்டக்கூட்டத்திற்குப் பின் ஜோர்டான் தனது முடிவை அறிவித்தது.
சமீபத்தில் நடந்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில், இஸ்ரேலுடனானதூதரக உறவுகளை முறித்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்துஎகிப்தும், ஜோர்டானும் தங்களது இஸ்ரேல் தூதர்களை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜோர்டான் மன்னர் 2-வது அப்துல்லா கூறுகையில், இஸ்ரேலின் நடவடிக்கைதேவையில்லாதது என்று கூறியுள்ளார். ஜோர்டானுக்கு வந்துள்ள அமெரிக்கபாதுகாப்பு அமைச்சர் வில்லியம் கோஹனுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போதுஇவ்வாறு அவர் கூறினார்.
பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியவுடனேயே ஜோர்டான்தூதர், தலைநகர் அம்மானுக்குத் திரும்பி விட்டார்.
இதற்கிடையே, எகிப்து தனது முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று அமெரிக்காகோரியுள்ளது. வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜேக் சீவட்செய்தியாளர்களிடம் கூறுகையில், எகிப்து தனது முடிவை வாபஸ் பெற்றுக் கொண்டு,தூதரை மீண்டும் இஸ்ரேலுக்கு அனுப்ப வேண்டும்.
இஸ்ரேலும், பாலஸ்தீனமும் தங்களது வன்முறையைக் கைவிட்டுவிட்டு அமைதிப்பாதைக்குத் திரும்ப வேண்டும்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலைமை மேலும் மோசமடைகிறது என்பதைஅமெரிக்கா உணர்ந்துள்ளது என்றார் அவர்.
வன்முறை தொடர்கிறது:
இதற்கிடையே, மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளில் தொடர்ந்து வன்முறைநீடிக்கிறது. கடந்த இரு மாதங்களாக இப்பகுதிகளில் நடந்து வரும் வன்முறைகளில்இதுவரை 251 பேர் இறந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள்பாலஸ்தீனர்கள்.
மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 4பாலஸ்தீனர்கள் இறந்தனர். இன்னொரு பாலஸ்தீனர் காயமடைந்து பின்னர் இறந்தார்.
இதேபோல, திங்கள்கிழமை குண்டுவெடிப்பு நடந்த யூத குடியேற்றப் பகுதியில்,பாலஸ்தீனர் சுட்டு, ஒரு யூதர் இறந்தார். குழந்தைகளை ஏற்றிச் சென்ற பஸ் அருகேதிங்கள்கிழமை பாலஸ்தீனர்கள் வைத்த குண்டுக்கு 2 யூதர்கள் கொல்லப்பட்டதுநினைவிருக்கலாம்.
பஸ் குண்டுவெடிப்பையடுத்து, இஸ்ரேல் ஏவுகனைத் தாக்குதைலத் தொடங்கியது.பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத்தின் கட்சித் தலைமையகம் உள்பட பல இடங்களில்ஏவுகனைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications