ராஜ்குமார் மீட்பு: வெள்ளை அறிக்கை கேட்கிறார் சங்கரய்யா
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்கப்பட்டது தொடர்பாக பல்வேறு குழப்பங்கள்நிலவுவதால், அதுகுறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்என்று தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சங்கரய்யாகூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை:
ராஜ்குமார் மீட்பு தொடர்பாக பல செய்திகள் வெளியாகின்றன. இதனால் பொதுமக்கள்மத்தியில் பெரும் குழப்பம் நிலவுகிறது. எனவே உண்மை என்ன என்பதை விளக்கவேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டவர்களை ராஜ்குமாரைமீட்க அனுப்பியது தவறு. இது பிரிவினைவாதிகளுக்கு ஊக்கம் தருவது போலஅமைந்து விடும். அவர்களது கை தமிழகத்தில் ஓங்க அரசு அனுமதித்தது போலாகிவிட்டது.
விடுதலைப் புலிகளுக்கும், தமிழ்த் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்புகள்வலுப்பட்டுக் கொண்டிருப்பதாக செய்திகள் வரும் நேரத்தில், நெடுமாறன்போன்றவர்களை காட்டுக்கு அனுப்பியது தவறு.
வீரப்பன் மற்றும் அவருடன் புதிதாக சேர்ந்துள்ளவர்களை உடனடியாக பிடிக்க தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம், வீரப்பனைப் பிடிக்கிறேன் என்றநடவடிக்கையில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு விட அரசு காரணமாகஅமைந்து விடக் கூடாது.
கர்நாடக சிறையில் பல ஆண்டுகளாக தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு,விசாரணையின்றி வாடிக் கொண்டிருக்கும் கைதிகளை விடுதலை செய்ய தமிழக,கர்நாடக அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
யு.என்.ஐ.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications