கொளத்தூர் காவல் நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு
மேட்டூர்:
வீரப்பனது கூட்டாளிகள் தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சப்படுவதால் கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் அதிரடிப்படைப் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரை 108 நாட்களுக்குப் பிறகு, பழ.நெடுமாறன் தலைமையிலான தூதுக்குழுவினர் மீட்டு வந்தனர்.
இந்த நிலையில் வீரப்பனைப் பிடிப்பதற்காக தமிழக, கர்நாடக அதிரடிப் படையினர், வீரப்பனை பிடிக்கும் வகையில் காட்டுக்குள் புகுந்து தங்களது தேடுதல் வேட்டையைத் தொடங்கி விட்டனர்.
கடந்த முறை வனத் துறையினரை கடத்திச் சென்ற வீரப்பன் அவர்களை விடுதலை செய்து பின் ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் போலீஸ் நிலையத்தை தாக்கி ஆயுதங்களை எடுத்துச் சென்றார்.
இதேபோல் தற்போது வீரப்பன் நடமாடும் காட்டுப் பகுதியை ஒட்டியுள்ள போலீஸ் நிலையத்தை தாக்கலாம் என்று போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையொட்டி கொளத்தூர் போலீஸ் நிலையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 2 தலைமை காவலர்கள், 6 போலீஸார் கொண்ட அதிரடிப்படையினர் 8 மணி நேரத்துக்கு ஒரு தடவை மாறி, மாறி தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள்.
ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜதுரை பாதுகாப்பு நடவடிக்கைகளை உடன் இருந்து கவனித்து வருகிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications