பெரம்பலூர் சாலை விபத்தில் 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
பெரம்பலூர் மாவட்டம் பாதலூர் அருகே இரூர் கிராமத்தில் அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் சம்பவ இடத்திலேயேஇறந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
இவ்விபத்து புதன்கிழமை அதிகாலை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்தது. கார் சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இவ்விபத்துஏற்பட்டது.
காரில் பயணம் செய்தவர்கள் அனைவரும் திருச்சி மத்திய கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வந்தவர்கள். இறந்தவர்களில் கார் டிரைவரும் ஒருவர். விபத்தில்காயமடைந்த அனைவரும் டாக்டர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று போலீஸார்தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications