ராஜ்குமார் கடத்தல்: நீதி விசாரணை கேட்கிறது த.மா.கா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தவேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த தமிழ் மாநில காங்கிரஸ்தலைவருமான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராஜ்குமார் கடத்தப்பட்டதும்,அதைத் தொடர்ந்து திடீரென அவர் விடுவிக்கப்பட்டதும் பலவித சந்தேகங்களைஎழுப்புகிறது. வீரப்பனுடன் இருக்கு தமிழ்த் தீவிரவாதிகளுக்கும்,விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இருக்கிறது. இதனால் தேசிய பாதுகாப்புக்கும்அச்சுறுத்தல் எழுந்துள்ளது.

பினைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்ராமதாஸ், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் தமிழர்தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோருக்கு இடையில் நடந்த பேச்சுகுறித்த தகவல்கள் வெளியிடப்பட வேண்டும்.

இந்த மூன்று பேருமே விடுதலைப்புலிகளின் பகிரங்க ஆதரவாளர்கள் என்பதுஅனைவருக்கும் தெரியும்.

ராஜ்குமார் கடத்தப்பட்டது முதல் அவர் விடுவிக்கப்பட்டது வரை பல குழப்பங்கள்நிலவுகின்றன. கிரானைட் முதலாளிகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும்,கடத்தல்காரர்களுக்கும் இடையேயான தொடர்பு இந்தக் கடத்தல் மூலம்வெளிப்பட்டுள்ளது.

காட்டுக்குள் இருக்கும் தமிழ்த் தீவிரவாதிகளுக்கும், வெளியில் இருக்கும்தீவிரவாதிகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்தவும் இந்த கடத்தல் நாடகம்உதவியுள்ளது.

நெடுமாறன் மூலம் ஏன் பேச்சுவார்த்தை நடத்த வீரப்பன் விரும்பினான் என்பதுவிளக்கப்பட வேண்டும். காட்டுக்குள் இருந்து செயல்படும் தமிழ் நாடு மீட்புப்படையின் செய்தியையும் நெடுமாறன் சுமந்து கொண்டு வந்துள்ளார்.

தற்போது திடீரென அதிரடிப்படையின் நடவடிக்கைகள் துவங்கியுள்ளது அவசரகோலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முடிவாகும். வீரப்பனைப் பிடிப்பதில் அரசுஉண்மையிலேயே அக்கறை காட்டுகிறதா என்பது தெரியவில்லை.

ராஜ்குமாரை வீரப்பன் கடத்துவது குறித்து உளவுத்துறை போலீஸார் முதலிலேயேஉஷாராக இருக்கவில்லை. விடுதலை செய்யப்பட்ட பிறகும் கூட அவனை காட்டுக்குள்தப்ப விட்டுவிட்டார்கள். சரியான புலனாய்வுத் தகவல்கள் இருந்தால் வீரப்பனைப்பிடிப்பது பெரிய காரியமாக இருந்திருக்காது.

ராஜ்குமார் மற்றும் பிறர் காட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது, ஏராளமானஆயுதங்கள் காட்டுக்குள் கடத்திச் செல்லப்பட்டுள்ளன.

திடீரென ஒரு பெண் டாக்டர் (டாக்டர் பானு) காட்டுக்குள் தூதராக சென்று வந்ததும்மர்மமாக இருக்கிறது. இந்த டாக்டர், பெங்களூரில் விடுதலைப் புலிகளுக்குச் சிகிச்சைஅளித்துள்ளார். கிரானைட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார் என்றார்எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+