ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இந்தியா
டெல்லி:
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 7விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த பெப்சி கோப்பை டெஸ்ட்போட்டியில், ஒவ்வொரு நாளும் பரபரப்பாகவே முடிந்தது. இரண்டாவதுஇன்னிங்ஸில் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், இந்தியா புதன்கிழமைபிற்பகலுக்கு மேல் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் துவக்கியது.
சடகோபன் ரமேஷும், தாஸும் வந்த வேகத்தில் சென்று விட, வழக்கம் போலபொறுப்பு, டெண்டுல்கர் மீதும், டிராவிட் மீதும் விழுந்தது. இருவரும் அதை உணர்ந்துஅடித்து ஆடினர். குறிப்பாக டெண்டுல்கர், ஆட்டத்தில் ஒரு புயலைக் கொண்டுவந்தார். 39 ரன்கள் எடுத்த நிலையில் அவர் சென்று விட, டிராவிடுடன், ஜோடிசேர்ந்தார் கங்குலி.
முதல் இன்னிங்ஸைப் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் தூள் கிளப்பினார்டிராவிட். அசராமல் ஆடிய அவர் ஆட்டமிழக்காமல் 70 ரன்களை எடுத்தார். மறுபுறம்,கங்குலி ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் எடுத்தார். இருவரும் சேர்ந்து அணியைவெற்றிக்கு இட்டுச் சென்றனர்.
முன்னதாக, நான்காவது நாள் ஆட்ட இறுதியில், தனது 2-வது இன்னிங்ஸில் 5விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்திருந்த ஜிம்பாப்வே, இறுதி நாளில் தனதுஇன்னிங்ஸைத் தொடர்ந்தது. ஆட்ட நேர இறுதி வரை இழுத்துச் சென்று விடலாம்என்று நினைத்திருந்த ஜிம்பாப்வே வீரர்களுக்கு எமனாக வந்தார் ஸ்ரீநாத்.
முதல் நாளில் 3 விக்கெட்டுகளைப் பறித்திருந்த ஸ்ரீநாத், இறுதி நாளில் மேலும் 2விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இதனால் 225ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே.
இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்றகணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. மேன் ஆப் தி மேட்ச்சாக ஸ்ரீநாத் தேர்வுசெய்யப்பட்டார். முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் எடுத்த ராகுல் டிராவிடுக்குசிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.
அடுத்த போட்டி நாக்பூரில் சனிக்கிழமை துவங்குகிறது.
சுருக்கமான ஸ்கோர்:
முதல் இன்னிங்ஸ்:
- ஜிம்பாப்வே - 422/9 (ஆண்டி பிளவர் 183, கேம்பல் 70, கர்லிஸ்லி 58).
இந்தியா - 458/4 (டிராவிட் 200, டெண்டுல்கர் 122).
- ஜிம்பாப்வே - 225 (ஆண்டி பிளவர் 70, கர்லிஸ்லி 32, விட்டால் 29).
இந்தியா - 190 (டிராவிட் 70, கங்குலி 65, டெண்டுல்கர் 39).
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications