"அதிரடிப்படையால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது
சேலம்:
வீரப்பனைத் தேடும் அதிரடிப்படை வீரர்களின் நடவடிக்கையில் அப்பாவிபொதுமக்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கன்னட நடிகர்ராஜ்குமாரை மீட்க உதவிய கொளத்தூர் மணி கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வீரப்பனைத் தேடுகிறோம் என்றபோர்வையில், அப்பாவி பொதுமக்கள் மீது அதிரடிப்படை எந்த நடவடிக்கையும்எடுத்து விடக் கூடாது.
அதிரடிப்படை வீரர்களால் பாதிக்கப்பட்ட் குடும்பத்தினர் நலனுக்காக ரூ. 10 கோடிஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியிலிருந்து உடனடியாக ரூ. 1 கோடியை விடுவித்து,அதை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும்.
ராஜ்குமார் மீட்பில் ஈடுபட்ட அனைவரும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரியநிவாரணத் தொகை வழங்கப்படாத வரை ஓய மாட்டார்கள்.
நான் திராவிட கழகத்திலிருந்து விலகியது பெரிய விஷயமல்ல. இது தந்தைக்கும்,மகனுக்கும் இடையிலான சண்டை போன்றது. கர்நாடகத்தில் வசிக்கும்லட்சக்கணக்கான தமிழர்களின் உயிரைக் கருத்தில் கொண்டே நான் காடு செல்ல முடிவுசெய்தேன் என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications