பெண்களே பிரச்சினையா? டயல் 8295151!
சென்னை:
சென்னையில் பெண்களுக்கு எந்த நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டாலும் அவர்கள் உடனடியாக 8295151 என்ற தொலை பேசி எண்ணைத் தொடர்பு கொண்டுஉதவி கேட்கலாம் என்று சென்னை போலீஸ் கமிஷனர் காளிமுத்து புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
போலீஸ் கமிஷனர் காளிமுத்து இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை:
சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான வரதட்சணைக் கொடுமை, பாலியல் கொடுமைகள், பலாத்காரம், கேலி, கிண்டல் செய்தல், குடும்ப வன்முறைபோன்ற கீழ்த்தரமான செயல்கள் நடக்கின்றன. இவைகளைத் தடுத்து நிறுத்த அரசு பல்வேறு நட வடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.
பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த பெண்கள் உதவிக் கரம் என்ற அமைப்பு கடந்த 15 ம் தேதி முதல் சென்னை ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது.
எங்கே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கிறதென்றாலும், இக்கட்டான சூழலில் பெண்கள் சிக்கிக் கொண்டாலும் உடனடியாக உதவி செய்யத்தயாராக இருக்கிறார்கள் இங்கு வேலை செய்யும் பெண் போலீஸார்.
இந்த மையத்திற்கு வரும் தகவல்களை சேகரிக்க, பெண் சப்-இன்ஸ்பெக்டர், இரண்டு பெண் போலீஸார் எப்போதும் பணியில் இருப்பார்கள். 8295151என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு எந்த நேரமும் உதவி கேட்கலாம். ஆண், பெண் யாராக இருப்பினும் இந்த மையத்தைத் தொடர்பு கொண்டு உதவிகேட்கலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications