இந்தியத் தொழிற்சாலைகளுக்கு தெ.ஆப்பிரிக்க அமைச்சர் எச்சரிக்கை
ஜோகன்னஸ்பெர்க்:
தென் ஆப்பிரிக்காவின் லெனேசியா நகரிலுள்ள இந்தியத் தொழிற்சாலைகளில் அடிக்கடி வெடி விபத்துக்கள்ஏற்படுவதற்கு, தொழிற்சாலை உரிமையாளர்களே காரணம் என்று தென் ஆப்பிரிக்க தொழில் துறை அமைச்சர்மெம்பாதைஸ் மதாத்லானா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கடந்த வெள்ளிக்கிழமை லெனேசியா நகரிலுள்ள எஸ்செம் என்ற தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது.இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். நான் இந்த தொழிற்சாலையை நேரில் சென்று பார்த்தேன்.
இதையடுத்து பல இங்குள்ள பல தொழிற்சாலைகளை நேரில் சென்று பார்வையிட்டேன். அப்போது பெரும்பாலானதொழிற்சாலைகளில் முதலுதவி சாதனங்கள் இல்லை. தீ விபத்து ஏற்பட்டால் அதை அணைக்கக் கூடிய சாதனங்கள்இல்லை. ஒரு தொழிற்சாலையில் கூட அடிப்படை வசதிகள் இல்லை.
இவையெல்லாம் அவசரமாக நீக்கப்பட வேண்டிய குறைகள். மேலும் தொழிற்சாலை முதலாளிகள் தங்கள்தொழிற்சாலைகளில் இரவும், பகலும் ஒரு காவலாளரைப் போட்டு காவல் காக்கச் செய்ய வேண்டும்.பாதுகாப்புக்களை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாது என்றார்.
தொழில்துறை ஆய்வாளர் புஸி நிக்வேனியா கூறுகையில், ஒரு தொழிற்சாலையில் தீ விபத்து அல்லது வெடிவிபத்து ஏற்படுகின்றதென்றால் அதற்கு முழு முதல் காரணம் தொழிற்சாலை நிர்வாகத்தினரோ அல்லது அங்குவேலை செய்யும் ஊழியர்களோதான்.
பெரும்பாலும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக இருப்பதால், இங்கு வேலை செய்யும் ஊழியர்களால்தொழிற்சாலை நிர்வாகத்தாரிடம் பாதுகாப்பை அதிகரிப்பது பற்றிக் கூற முடியாது. அதனால் அவர்கள்பாதுகாப்புக்கள் குறைவாக உள்ள தொழிற்சாலையின் சூழலுக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்கிறார்கள் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications