கேரள காட்டுப் பகுதியில் வீரப்பன்?
சத்யமங்கலம்:
அதிரடிப்படையினரை ஏமாற்றுவதற்காக வீரப்பன் கேரள காட்டு எல்லைக்குத் தப்பித்துச் சென்றிருக்கலாம் என்றுதகவல்கள் கிடைத்துள்ளன.
வீரப்பனைத் தேடிப் பிடித்துக் கைது செய்யும் நடவடிக்கையில் தமிழக, கர்நாடக அதிரடிப்படை வீரர்களும்,ஆயுதப்படை போலீஸாரும் முழுவீச்சில் இறங்கியுள்ளனர்.
அவர்கள் கடந்த 4 நாட்களாக சத்தியமங்கலம் காட்டுப் பகுதிகளுக்குள் புகுந்து வீரப்பனைத் தேடி வருகிறார்கள்
இதற்கிடையே வீரப்பன் கேரள காட்டுப் பகுதிக்குத் தப்பித்துச் சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. தனதுபிடியிலிருந்து, நடிகர் ராஜ்குமாரை விடுவித்த உடனேயே அதிரடிப்படையினர் எப்படியும் காட்டுக்கு வந்துதன்னைப் பிடித்து விடுவார்கள் என்பதை வீரப்பன் நன்கு உணர்ந்திருந்தார்.
வீரப்பன் காட்டு மலைப்பகுதியில் தினமும் 40 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் ஆற்றல் படைத்தவர். இதைத்தூதுக் குழுவினரும் உறுதி செய்துள்ளனர்.
அந்தக் கணக்குப்படி பார்த்தால் கடந்த 5 நாட்களில் வீரப்பன் உத்தேசமாக 175 கிலோ மீட்டர் தூரத்தையாவதுகடந்து சென்றிருக்க முடியும்.
ராஜ்குமாரை விடுவித்த பின்னர் தனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை நன்கு உணர்ந்த வீரப்பன்இன்னும் தமிழக காட்டு எல்லைப் பகுதியிலேயே இருப்பார் என்று நினைப்பது தவறு என்கின்றனர் அதிரடிப்படையினர்.
இதனால், முழு காட்டுப் பகுதியிலும் தேடுதல் வேட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications