"இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஊடுறுவலை பாக். அனுமதிக்காது
டெல்லி:
ரம்ஜானை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில், இந்தியா சண்டை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் எல்லைக் கட்டுப்பாட்டைத் தாண்டி, தீவிரவாதிகள் செல்வதைபாகிஸ்தான் ஒரு போதும் அனுமதிக்காது என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி:
1999-ம் ஆண்டு, ஜூலை 4 ம் தேதி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் தீவிரவாதிகள் யாரும்நடமாடாதபடி தடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபடும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். அதற்கு முன் அவர் வாஷிங்டனில் அமெரிக்கஜனாதிபதி பில் கிளின்டனுடன் இதுகுறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
வாஷிங்டன் ஒப்பந்தப்படி, எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அனுமதியில்லாமல் ஊடுருவும் தீவிரவாதிகளைப் பாகிஸ்தான் ஊக்குவிக்கக் கூடாது. இந்தஒப்பந்தத்தை, பாகிஸ்தான் எப்போதும் மதித்து நடக்கும். ஒருபோதும் இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறாது. இந்த விஷயத்தில் இந்தியாவும் அதிக அளவுஆதரவு தருகிறது என்பதை மறுக்க முடியாது.
நவாஷ் ஷெரீபால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தம், கடந்த வருடம் கார்கிலில் ஏற்பட்ட போருடன் முடிவடைந்தது. இது குறித்து ராணுவ ஆட்சியாளர்முஷாரப் வேறு எதுவும் உறுதியாகக் கூறவில்லை.
1999 ம் வருடம் பிப்ரவரி மாதம் இந்திய பிரதமர் வாஜ்பாய், பாகிஸ்தானிலுள்ள லாகூருக்குச் சென்றார். அப்போது பிரதமர் வாஜ்பாய்க்கும், நவாஸ்ஷெரீபுக்கும் இடையே லாகூர் ஒப்பந்தம் ஏற்பட்டது. பாகிஸ்தான் ராணுவம் அந்த ஒப்பந்தத்தையும் நிராகரித்து விட்டது.
ஆனால், தற்போது மத்திய அரசு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், எல்லைக் கட்டுப் பாட்டுப் பகுதியில் தீவிரவாதிகளை பாகிஸ்தான்ஒருபோதும் அனுமதிக்காது.
பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி, இந்திய எல்லைக்குள் நுழைந்து குற்றங்களிலோ அல்லது தீவிரவாதசெயல்களில் ஈடுபடவோ முனைந்தால் அவர்களைத் தண்டிப்பதில் தவறில்லை.
எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் 50,000 ராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளது. இந்தியா 7, 00, 000 ராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளது. அதிகமான அளவுராணுவ வீரர்களை நிறுத்தியுள்ள இந்தியாவால் நிச்சயமாக தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுத்து நிறுத்த முடியும்.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டத்தைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் பாகிஸ்தான் சரியாக நடந்து கொள்ளவில்லை என்றார் சத்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications