பெட்ரோலியத்துறை: இந்தியாவுக்கு 100 பில்லியன் டாலர் தேவை
டெல்லி:
இந்தியாவுக்கு பெட்ரோலியத்துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 100 பில்லியன் டாலர் முதலீடு தேவைப்படும்.
பெட்ரோலியத்தை இறக்குமதி செய்வதைக் குறைக்க வேண்டுமானால், இந்தியாவிலேயே பெட்ரோலிய, இயற்கை வாயுப்படிவுகளைக் கண்டறிய வேண்டும். இந்தப் பணிக்கும், கண்டறியப்பட்ட பிறகு பெட்ரோலியத்தை சுத்தப்படுத்தி எரிபொருள்கள்தயாரிக்கவும் 100 பில்லியன் டாலர் தேவைப்படும்.
டெல்லியில் நடந்த ஒரு கருத்தரங்கில் இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ராம் நாயக் கூறுகையில், இப்போதுமேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களில் மட்டும் அடுத்த 5 ஆண்டுகளில் 2.8 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட உள்ளன.
சமீபத்தில் கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப் படுகையில் இயற்கை எரிவாயுப் படிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்குஒரு நாளைக்கு 4 மில்லியன் கியூபிக் மீட்டர் காஸ் உற்பத்தி செய்ய முடியும்.
2006-2007ம் ஆண்டில் இந்தியாவின் பெட்ரோலியத் தேவை 180 டன்களாக உயரும். 2024-2025ல் இந்தத் தேவை 370மில்லியன் டன்களாக உயரும். 2024-2025ம் ஆண்டில் இந்தியாவின் சமையல் காஸ் தேவை ஒரு நாளைக்கு 390 மில்லியன்கியூபிக் மீட்டராக உயரும்.
இப்போது இதியாவில் ஆண்டுக்கு 33 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோலியமும், ஒரு நாளைக்கு 65 மில்லியன் கியூபிக் மீட்டர்சமையல் எரிவாயுவும் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.
இப்போது நம்மிடம் உள்ள பெட்ரோலியம் சுத்தப்படுத்தும் ஆலைகளைக் கொண்டு ஆண்டுக்கு 112 மில்லியன் டன்பெட்ரோலியததைத் தான் சுத்தப்படுத்த முடியும். அடுத்த 25 ஆண்டுகளில் இந்த சுத்தப்படுத்தும் திறன் 3 மடங்காக வேண்டும்.அப்போது தான் நிலைமையயும் பெட்ரோலியப் பொருள்களின் தேவையையும் சமாளிக்க முடியும்.
இதற்கு மட்டும் 60 பில்லியன் டாலர்கள் தேவைப்படும். இப்போது ஒரிஸ்ஸாவில் பிரதீப்பிலும், பஞ்சாபில் பட்டிண்டாவிலும்,மத்தியப் பிரதேசத்தில் பினாவிலும் 3 இந்தியன் ஆயில் கார்போரேஷனின் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள் கட்டப்பட்டுவருகின்றன.
பெட்ரோலியப் பொருள்களை முறையாக சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும், குழாய்கள் மூலம் கொண்டு செல்லவும்,துறைமுகங்களில் சரியான பெட்ரோலிய வினியோகக் கட்டமைப்பை உருவாக்கவும், புதிய தொழில்நுட்பங்களைஅறிமுகப்படுத்தவும் சுமார் 33 பில்லியன் டாலர்கள் தேவை.
அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்ய 5.4 பில்லியன் ரூபாய்தேவைப்படும்.
2002ம் ஆண்டிலிருந்து மண்ணெண்ணெய்க்கு 33.3 சதவீதமும், சமையல் காஸூக்கு 15 சதவீதமும் மட்டுமே மத்திய அரசுமானியம் வழங்கும். பிற பெட்ரோலியப் பொருள்களுக்கு மானியம் வழங்கப்பட மாட்டாது என்றார்.
இந்திய திட்டக் கமிஷனின் துணைத் தலைவர் கே.சி. பந்த் கூறுகையில், தோரியம், யுரேனியம் ஆகியவற்றைக் கொண்டு அணுமின்சாரத்தை இந்தியா அதிக அளவில் தயாரிக்க வேண்டும்.
-
இந்தியாவில் தங்கம் வாங்க ஆள் இல்லை! 70% சரிந்த வியாபாரம்.. பின்னணியில் அதிர வைக்கும் காரணம்? -
கடன் vs முதலீடு.. நிம்மதியாக தூங்க இதுதான் பார்முலா.. எதை செய்தால் நமக்கு லாபம்? -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications