"ராஜ்குமார் விடுதலையில் புலிகளுக்கு தொடர்பில்லை

Subscribe to Oneindia Tamil

மைசூர்:

கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்கப்பட்ட விஷயத்தில் விடுதலைப் புலிகளுக்கு எந்த விதமான தொடர்பும் கிடையாது என தமிழர்தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

ராஜ்குமார் கடத்தப்பட்ட பின்பு அவரை விடுவிக்க வீரப்பன் விதித்த நிபந்தனைகளில் மைசூர் மத்திய சிறையில் இருக்கும் 51 தடாகைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதும் ஒன்று.

அந்த தடா கைதிகளை நெடுமாறன், பேராசிரியர் கல்யாணி, சுகுமாரன், கொளத்தூர் மணி, வக்கீல் வேணுகோபால் ஆகியோர்சென்று பார்த்தனர். அவர்களுக்கு நெடுமாறன் பழங்கள் வழங்கினார். அப்போது, தங்களை விடுதலை செய்ய முயற்சிக்குமாறுநெடுமாறனிடம், அழுகையுடன் வேண்டிக் கொண்டனர். அவர்களுக்கு நெடுமாறன் ஆறுதல் கூறினார்.

பின்னர், அங்கு காத்திருந்த நிருபர்கள், ராஜ்குமாரை விடுதலை செய்ய ஒப்பந்தம் ஏதும் ஏற்பட்டதா என நிருபர் கேட்டபோதுஅதை வீரப்பனிடம்தான் கேட்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து நிருபர்களிடம் நெடுமாறன் கூறியதாவது:

ராஜ்குமார் விடுதலைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. தடா கைதிகளை விடுவிக்கும்பணியில் நான் ஈடுபட்டு வருகிறேன். அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கத்தான சதாசிவம் கமிஷன்சிபாரிசு செய்துள்ளது.

அதிரடிப்படையின் கொடுமைகள் குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட வேண்டும். தவறு செய்த அதிரடிப்படையினர்தண்டிக்கப்பட வேண்டும்.

வீரப்பனை பிடிக்க அதிரடிப்படையை அனுப்பியது தவறு. குற்றம் சாட்டப்பட்ட அதிரடிப்படையினரை காட்டுக்கு அனுப்பியதுஅவர்கள் மீது நடத்தப்பட இருக்கும் விசாரணையை பாதிக்கும்.

ஜெயப்பிரகாஷ் நராயண், வினோபாபாவே முன் சம்பல் கொள்ளைக்காரர்கள் சரண் அடைந்தார்கள். எனவே வீரப்பன் சரண்அடைவது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும்.

தடா கைதிகள் நிலை பரிதாபமானது. அவர்கள் கடந்த 8ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், விதவையான 2 மருமகள்கள் ஆகியோர் சிறையில் இருக்கிறார்கள். ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 7 பேர் சிறையில் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டு ஆண்கள் அதிரடிப்படையினரால் கொல்லப்பட்டுவிட்டனர்.

சிறையில் இருக்கும் இவர்களை விடுவிக்க கர்நாடக முதல்வர் தனி நீதிமன்றம் ஏற்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.

அதிரடிப்படையினரின் கொடுமைகளை வெளிப்படுத்த கொளத்தூரில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மனித உரிமைகமிஷன் பிரதிநிதிகள், சமூக அமைப்பு பிரதிநிதிகளுக்கு இதில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பப்பட இருக்கிறது.

தடா கைதிகளை விடுவிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+