50 அடி பள்ளத்தில் பஸ் விழுந்து 2 பேர் பலி
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பாலத்தின் பக்கச் சுவரை உடைத்துக் கொண்டு அரசு பஸ் கவிழந்ததில், பஸ்சின் நடத்துனர்உட்பட இரண்டு பேர் உ.யிரிழந்தனர்.
வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து சேலத்துக்கு அரசு விரைவு பஸ் புறப்பட்டுச் சென்றது. பஸ்சை டிரைவர் ரவிக்குமார்ஓட்டிவந்தார். சனிக்கிழமை அதிகாலையில் சேலத்திற்கு அருகே இருக்கும் ஆத்தூருக்கு அருகே வந்த போது டீ குடிப்பதற்காகபஸ்சை டிரைவர் நிறுத்தினார்.
அதன் பின் பஸ் கிளம்பி ஒரு கிலோ மீட்டர் தூரம் கடந்த பின் வசிஷ்ட ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலத்தை கடக்கும் போதுபேருந்து நிலை தடுமாறி பக்கச் சுவரை உடைத்துக்கொண்டு 50 அடி பள்ளத்தில் தலைகீழாக விழுந்தது.
ஓட்டுனர் இருக்கையின் பின்புறம் வழியாக இரும்பு கம்பி குத்தியதால் நடத்தனர் சண்முக சுந்தரம் (47) என்பவரும் கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் ( 26) என்பவரும் அந்த இடத்திலேயே இறந்தனர்.
பேருந்தில் பயணம் செய்த ஆண்கள் 31 பேரும், பெண்கள் 8 பேரும், 1 பெண்குழந்தை உட்பட்டவர்கள் பஸ்சிலிருந்து வெளியேவரமுடியாமல் அலறித் துடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த பால்காரர்கள் போலீசுக்குதகவல் தெரிவிதத்தனர்.
ஆத்தூர் போலீஸ் டி.எஸ்.பி. , இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் தீயணைப்புப்படையினர் உதவியோடு பஸ்சின் பக்கவாட்டுதகடுகளை பெயர்த்து பேருந்துக்குள் சிக்கியிருந்த 38 பேரை ஆத்தூர் அரசு மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications