புளோரிடாவில் புஷ் வெற்றி பெற்றதாக அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

புளோரிடா:

புளோரிடா மாநிலத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளில்ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல் கோரை விட, கூடுதலாக 537 வாக்குகள் பெற்றுகுடியரசுக் கட்சி வேட்பாளர் ஜார்ஜ் புஷ் ஜூனியர் வெற்றி பெற்றுள்ளதாக மாநிலஅமைச்சர் கேதரின் ஹேரிஸ் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பையடுத்து அடுத்த அமெரிக்க அதிபராகும் வாய்ப்பு, புஷ்ஷக்குஅதிகரித்துள்ளது. தனது நிர்வாகத்தில் இடம் பெறப் போகிறவர்களின் பட்டியலைதயாரிக்கப் போவதாக புஷ் அறிவித்துள்ளார். ஆனால் இந்த முடிவை எதிர்த்துவழக்குத் தொடரப் போவதாக கோர் அறிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு புளோரிடா மாநில வாக்கு எண்ணிக்கை விவரம்அறிவிக்கப்படும் என்று முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 2கவுண்டிகளின் கை வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் நிலையில்,சொல்லியபடியே வாக்கு எண்ணிக்கை விவரம் அறிவிக்கப்பட்டது.

தேர்தல் பிரசார கமிஷன் சார்பில் இந்த முடிவுகளை அறிவிக்கிறேன். ஜார்ஜ் புஷ்2,912,790 வாக்குகளும், கோர் 2,912,253 வாக்குகளும் பெற்றுள்ளனர். புஷ்ஷுக்குமாநிலத்திலுள்ள 25 எலக்டோரல் வாக்குகள் கிடைத்துள்ளன என்றார் கேத்தரின்.

இதையடுத்து புஷ்ஷுக்கு தேவைப்பட்ட வாக்குகளை விட கூடுதலாக ஒருஎலக்டோரல் வாக்குக் கிடைத்துள்ளது. தற்போது புஷ்ஷுக்கு 271 வாக்குகளும்,கோருக்கு 255 வாக்குகள் உள்ளன.

முன்னதாக, பாம்பீச் கவுண்டியில் எண்ணப்பட்டு வரும் கை வாக்கு எண்ணிக்கைமுடிவுகளை ஒப்படைக்க காலக் கெடுவை நீடிக்க வேண்டும் என்று விடுக்கப்பட்டகோரிக்கையை கேத்தரின் நிராகரித்தார். இன்னும் 1000 வாக்குகள் அங்கு எண்ணப்படவேண்டும்.

பாம்பீச் தவிர, மியாமி டேட், நஸ்ஸாவ் கவுண்டிகளிலும் வாக்குகள் கையால்எண்ணப்பட்டு வருகிறது. இதன் முடிவுகள் தெரிந்தால் கோருக்கு வாய்ப்பு இருக்குமாஎன்பது தெரிய வரும்.

புஷ் தரப்பில் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இருப்பினும், இந்த முடிவைஎதிர்த்தி வழக்குப் போடப் போவதாக கோர் தரப்பு கூறியுள்ளது. துணை அதிபர்தேர்தலில் நிற்பவரும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவருமான ஜோ லிபர்மன்கூறுகையில், இந்த முடிவை எதிர்த்து புளோரிடா நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்வோம் என்றார்.

லிபர்மன் கூறுகையில், நூற்றுக்கணக்கான வாக்குகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், கேத்தரின் புறக்கணித்து விட்டார். பல மணி நேரம் உட்கார்ந்து தேர்தல்அலுவலர்கள் எண்ணிய வாக்குகளை அவர் நிராகரித்துள்ளது வருத்தம் தரக் கூடியது.

புளோரிடா சட்டப்படி, கேத்தரினின் இந்த முடிவை எதிர்த்து வழக்குத் தொடுப்பதைத்தவிர அல்கோருக்கும்,எனக்கும் வேறு வழி தெரியவில்லை என்றார்.

இதற்கிடையே, கோர் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று புஷ்கோரிக்கை விடுத்துள்ளார். தயவு செய்து இந்த முடிவை ஜனநாயகக் கட்சியினர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அப்படி அவர்கள் வழக்குத் தொடர்ந்தால்,அதுஅமெரிக்காவுக்கு நல்லதல்ல என்று கூறியுள்ளார் புஷ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+