அதிரடிப்படை நடவடிக்கையை நிறுத்த கோரிக்கை
சேலம்:
சதாசிவம் விசாரணைக் கமிஷனின் விசாரணை முடியும் வரை அதிரடிப்படையின் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என சேலத்தில் நடந்த மாநாட்டில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேசிய மனித உரிமை ஆணையத்தைக் கண்டித்து சேலம் அருகே உள்ள கொளத்தூரில் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு மக்கள் கண்காணிப்பகம்,மக்கள் சிவில் உரிமைக் கழகம், தமிழ்நாடு பழங்குடியினர் மக்கள் சங்கம், சோகோ அறக்கட்டளை ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன.
இதில், தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் நெடுமாறன், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவர் ரவிக்குமார், பேராசிரியர் கல்யாணி, சுகுமாறன்,பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே மணி, கர்நாடகத் தமிழர் பேரவைத் தலைவர் சண்முகசுந்தரம், தென்னிந்திய நுகர்வோர் சங்கத் தலைவர் ஹென்றிடிபேன், கொளத்தூர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
கர்நாடகாவில் மைசூர் சிறையில் விசாரணையின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ள 51 தடா சிறைக் கைதிகளையும் ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும். தடாசட்டம் காலாவதியாகி நீண்ட நாட்களாகி விட்டன. இந்த சட்டத்தின் கீழ் அடைத்து வைக்கப்பட்டுள்ள இவர்களை வேறு சட்டப் பிரிவின் கீழ் தான் விசாரணைசெய்ய வேண்டும். இதற்கான சட்டத் திருத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
அதிரடிப்படையினரின் சித்திரவதைக்கு இலக்காகியுள்ள பொதுமக்கள், பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு அரசு உடனடியாக நிவாரணம் அளிக்கவேண்டும். நிவாரணம் அறிவிக்கும் முன் இடைக்கால நிவாரணம் அளிக்க வேண்டும்.
அதிரடிப்படையினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் தேசிய பெண்ணுரிமைக் கமிஷன் இந்த பிரச்னையில்தலையிட வேண்டும். இதற்கென தனிக் கமிட்டி ஒன்றை அமைத்து விசாரணை செய்ய வேண்டும். ராஜ்குமார் கடத்தல் பிரச்னையின்போது உச்சநீதிமன்றவிசாரணையில், மனித உரிமைக் கமிஷன் தலையிடாமல் மெத்தனமாக செயல்பட்டுள்ளது. இந்தப் போக்கை மாநாடு கண்டிக்கிறது.
அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள சதாசிவா விசாரணைக் கமிஷனின் விசாரணை துவங்கும் நிலையில்உள்ளது. இந்த நிலையில் அதிரடிப்படையை காட்டுக்குள் அனுப்பியுள்ளது விசரணையைப் பாதிக்கும் வகையில் உள்ளது எனவே அதிரடிப்படையின் நடவடிக்கைகளைவிசாரணை முடியும் வரை நிறுத்தி வைக்க வேண்டும்.
தற்போது அதிரடிப்படையினர் காட்டுக்குள் புகுந்துள்ளது, விசாரணைக்கு சாட்சி சொல்ல வரும் மக்களைப் பாதிப்பதாக உள்ளது. சாட்சிகளுக்கு அச்சுறுத்தல்ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் செயலர் புருஷோத்தமன் கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அரசு உடனடியாக நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications