"காய்ச்ச மாட்டோம் .. குடிக்க மாட்டோம்
சென்னை:
கள்ளச் சாராயம் காய்ச்ச மாட்டோம், குடிக்க மாட்டோம் என்று சுமார் 240 கள்ளச் சாராய வியாபாரிகள் போலீஸ்முன்னிலையில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இது குறித்து மதுவிலக்கு போலீஸார் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், சென்னை கிழக்கு மாவட்டம் பூந்தமல்லிஉட்கோட்டத்திலுள்ள கொளப்பாக்கம், பாரிவாக்கம், கெருகம்பாக்கம் ஆகிய கிராமங்களில் கள்ளச்சாராயத்தைகுலத் தொழிலாக பலர் செய்து வந்தனர்.
இப்பகுதிகளில் கள்ளச் சாராயத்தை முற்றிலும் ஒழிக்க மதுவிலக்கு ஐ.ஜி நடராஜ், செங்கை சரக டி.ஐ.ஜி ஜாபர் சேட்,எஸ்.பி. பாலசுப்பிரமணியன் ஆகியோரின் உத்தரவின் பேரில் மதுவிலக்கு பிரிவு கூடுதல் எஸ்.பி.நாகராஜன் மற்றும்போலீஸார் சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நடவடிக்கையால் இப் பகுதியில் கள்ளச்சாரயம் காய்ச்சுபவர்கள் தங்களது தொழிலை கை விட்டனர். இதைத்தொடர்ந்து இந்த கிராமங்களில் மதுவிலக்கு கமிட்டி ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டது. விழா மதுவிலக்குபிரிவு கூடுதல் எஸ்.பி. நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் கூடுதல் எஸ்.பி நாகராஜன், டி.எஸ்.பிக்கள் மூக்கையா, பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் விஜயகுமார்,எஸ்.ஐ.க்கள் பொற்செழியன், வைகுண்ட மூர்த்தி உள்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். அனைவர்முன்னிலையிலும், கள்ளச்சாராய வியாபாரிகள் 240 பேர் கள்ளச்சாராயம் காய்ச்ச மாட்டோம், விற்க மாட்டோம்என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications