பேரணி நடத்துகிறார்கள் தியேட்டர்கள் உரிமையாளர்கள்
கோவை:
கேளிக்கை வரி ரத்து மற்றும் பராமரிப்புக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு திரையரங்குஉரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
கோவையில் தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ராமநாதன் தலைமையில் பொதுக் குழுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் பேரணி நடத்தவுள்ளோம். பேரணிநடத்தப்படும் நாள் குறித்து அடுத்த 15 தினங்களில் பொதுக் குழுக் கூடி விவாதிக்கும்.
ஆங்கிலப் படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிட உள்ள தடையை உடனடியாக அகற்ற வேண்டும். இதற்குதடை விதிக்கக் கூடாது. கூட்டு அதிகாரிகள் குழு என்ற பெயரில் திரையரங்குகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டகுழுவை ரத்து செய்ய வேண்டும்.
பொதுமக்களிடமிருந்து வசூல் செய்யும் பராமரிப்புக் கட்டணத்தை 50 பைசாவிலிருந்து 2 ரூபாயாக உயர்த்தவேண்டும். கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்.
கிராமப்புறத் திரையரங்குகளில் குறைந்த பட்சக் கட்டணமாக ரூ.5 நிர்ணயிக்க வேண்டும். இந்தக் கட்டண நிர்ணயம்செய்ய மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கேபிள் டி.வியால் திரையரங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தடுக்க வேண்டும். கேபிள் டி.விஆபரேட்டர்கள் நிமக்கு விரோதியல்ல. அவர்களை நமது சகோதரர்களாகப் பாவித்து புதுப்படங்களை ஒளிபரப்பவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கலாம் என்றும் கூட்டத்தில் கூறப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications