கார் விபத்தில் அறிவானந்த பாண்டியன் மரணம்
திருச்சி:
அகில இந்திய நாடார்கள் கூட்டமைப்பின் அமைப்பாளர் அறிவானந்த பாண்டியன் கார் விபத்தில் புதன் கிழமை மரணம் அடைந்தார்.
அகில இந்திய நாடார்கள் கூட்டமைப்பின் அமைப்பாளர் அறிவானந்த பாண்டியன். வயது 40. நாடார்கள் கூட்டமைப்பின் இளைஞர் அணி தலைவர் சண்முகக்கனி உள்பட 4 பேர் செவ்வாய் கிழமை இரவு சென்னையில் இருந்து மதுரைக்கு காரில் புறப்பட்டுச் சென்றனர்.
கார் புதன் கிழமை அதிகாலை 2.30 மணியளவில் சமயபுரத்தை அடுத்த சிறுகனூர் அருகேயுள்ள வால்பட்டரை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது கார் எதிர்பாராத விதமாக அங்கு பஞ்சராகி நின்று கொண்டிருந்த ஒரு லாரி மீது மோதி நொறுங்கியது.
இந்த விபத்தில் காரில் இருந்த அறிவானந்த பாண்டியன் மரணம் அடைந்தார். கார் டிரைவர் தர்மன் என்பவரும் அதே இடத்தில் பலியானார்.
இளைஞர் அணித்தலைவர் சண்முககனி, அறிவானந்த பாண்டியனுக்கு பாதுகாப்பாக சென்ற போலீஸ்காரர் முருகேசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் இருவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சண்முகக்கனி உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அறிவானந்த பாண்டியனது உடல், கார்மூலம் மதுரைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
புதன்கிழமை மாலை மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள காமராஜர் அறநிலையத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர்கீரைத்துறை சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications