Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரிட்டனுக்காக உயர் நீத்த திப்புசுல்தான் பேத்திக்கு கெளரவ விருது

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிராக பிரிட்டிஷ் ராணுவத்தின் உளவுப் பிரிவுக்கு உதவி செய்த திப்புசுல்தானின் கொள்ளுப் பேத்திக்கு அந் நாடு கெளரவித்துள்ளது.

கடந்த 200 ஆண்டுகளாக பிரிட்டிஷ ராணுவத்தில் சிறுபான்மையினராக உள்ள பிற நாட்டினர், பிற இனத்தினர்ஆற்றிய சேவைகளைப் பாராட்டும் வகையில் அவர்களை இங்கிலாந்து கெளரவித்து வருகிறது.

திப்பு சுல்தானின் கொள்ளு கொள்ளுப் பேத்தியான நூர் இனாயத் கானுக்கு அவரது மறைவுக்குப் பின் இந்தகெளரவம் அளிக்கப்பட்டது. அவருக்கு ஜார்ஜ் கிராஸ் விருது வழங்கப்பட்டது.

மாஸ்கோவில் பிறந்த நூர் பாரீசில் வளர்ந்தார். 1940ம் ஆண்டில் இங்கிலாந்து விமானப் படையின் சிக்னல்ஸ்பிரிவில் சேர்ந்ார். பாரீசை ஜெர்மனி ஆக்கிரமித்திருந்த நிலையில் அங்கு இங்கிலாந்தின் சார்பில் உளவாளியாகஅனுப்பப்பட்டார். இனரீதியாக அவரை உளவுத்துறை ஒடுக்கி வைத்திருந்தாலும் கூட அவரை பிரான்சுக்கு அனுப்பஇங்கிலாந்து ராணுவ உயர் அதிகாரிகள் முடிவெடுத்தனர்.

பிரஞ்சு மொழியில் சிறந்த தேர்ச்சி பெற்றவர் என்பதால் அவரை 1943ம் ஆண்டில் பிரான்சுக்கு அனுப்பியதுராணுவம்.

அங்கு மாண்டலின் என்ற பெயரில் தங்கியிருந்த கான் வயர்லெஸ் மூலம் இங்கிலாந்த ராணுவத்துக்கு உளவுசொல்லி வந்தார். ஆனால், அந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நாஜிப் படைகளிடம் சிக்கினார். அவரைகிட்டத்தட்ட 1 வருடம் சித்திரவதை செய்த நாஜிப் படையினர் 1944ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி தூக்கில்இட்டனர்.

நூரைப் போல பல இந்தியர்கள் இங்கிலாந்து ராணுவத்துக்காக இரண்டாம உலகப் போரில் தங்களது உயிரைஇழந்துள்ளனர். அந்த காலத்திலேயே இன்றைய மதிப்பில் சுமார் 100 மில்லியன் பவுண்ட் நிதியை இங்கிலாந்துராணுவத்துக்கு அளித்தது இந்தியா.

இங்கிலாந்து உளவுத்துறையில் இனரீதியான ஒடுக்குமுறைகள் எப்போதுமே அதிகம். அதை வென்று காட்டியவர்நூர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+