தண்டனைக்கு முன் வீரர்களின் சாதனைகள் கணக்கில் கொள்ளப்படும்
கல்கத்தா:
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை அளிக்கும் முன் அவர்கள்ஆற்றிய சாதனைகள் கருத்தில் கொள்ளப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியத்தின் தலைவர் முத்தையா தெரிவித்திருக்கிறார்.
கிரிக்கெட் வாரியத் தலைவர் முத்தையா உட்பட பல கிரிக்கெட் வாரியஉறுபபினர்களும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை அளிக்கும்முன் அவர்கள் நாட்டுக்காக செய்த சேவையை கணக்கில் கொள்ள வேண்டும். அதன்பின்னரே அவர்களுக்கான தண்டனை முடிவு செய்யப்பட வேண்டும் என கருத்துதெரிவித்துள்ளனர்.
இது போல் அவர்கள் முடிவெடுத்து குறைவான தண்டனைகள் அளிக்கப்பட்டாலோஅல்லது தண்டனை அளிக்கப்படா விட்டாலே லட்சக்கணக்கான இந்திய கிரிக்கெட்ரசிகர்கள் தாங்கள் கிரிக்கெட் வீரர்களால் ஏமாற்றப்பட்தாக எண்ணுவார்கள்.
கிரிக்கெட் வாரியத் தலைவர் முத்தையா, துணைத்தலைவர் கமல் மொரார்கா மற்றும்முன்னாள் கிரிக்கெட் குழு தலைவர் ராஜ் சிங் துங்கர்பூர் ஆகியோர் அசாருதீன்கிரிக்கெட்டுக்கு செய்துள்ள சாதனையால் அவருக்கு சலுகை வழங்கப்பட வேண்டும்என் எண்ணுகின்றனர்.
புதன்கிழமையன்று நடந்த கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்குபின் நிருபர்களிடம் முத்தையா கூறுகையில், விளையாட்டு வீரர்கள் செய்த சாதனைகள்கணக்கில் கொள்ளப்பட்டு. அதற்கு 30 சதவிதம் மதிப்பீடு கொடுக்கப்படும்.
உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கிரிக்கெட் வீரர்களுக்கு எந்தவிதமான தண்டனை கொடுப்பது என முடிவு எடுக்கப்படவில்லை,.
எல்லா உறுப்பினர்களும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனைவழங்க வேண்டும் என கூறினர். ஆனால் அவர்கள் செய்த சாதனைகள் கருத்தில்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தில்தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்றார்
அசார், ஜடேஜா, அஜய் ஷர்மா, மோங்கியா, மனோஜ் பிரபாகர் ஆகியோர் மீது மேட்ச்ஃபிக்சிங்கில் ஈடுபட்டதற்காகவோ அல்லது சூதாட்டஏஜென்டுகளுடன் தொடர்புவைத்திருந்ததற்காகவோவான தண்டனையை கிரிக்கெட் வாரியம் திங்கள்கிழமைஅறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொரார்கா கூறுகையில் அசாருதீனுக்கு வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளாைடதடை விதிப்பது தவறானது. அவர் செய்த தவறுக்களுக்காக சிறு அபராதம் விதிக்கலாம்என்றார்.
குற்றம் செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என்பது உறுதி என்றுகூறிய முத்தையா அசாருதீன் சி.பி.ஐ.யும், அதை விசாரித்த மாதவனும் அவர் மேட்ச்ஃபிக்சிங்கில் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்திருந்தாலும் அவரது சாதனைகள்சிறப்பானவை என்று கூறியுள்ளார்.
அசாருதீனுக்கு வாழ்நாள் தடை கொடுக்கக்கூடாது என்பதற்கான முயற்சிகள்எடுக்கப்பட்டு வருகின்றன. அவர் அது போல் தண்டிக்கப்பட்டால் கிரிக்கெட்சூதாட்டத்திற்காக முதன் முதலாக வாழ்நாள் தடை பெற்ற முதல் கிரிக்கெட் வீரர்அவராகத்தான் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜடேஜாவுக்கு அரசியல்வாதிகள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு 1ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்படலாம்.
மோங்கியாவிற்கு மிகக் குறைந்த தண்டனையே கிடைக்கும், அஜய் ஷர்மாவும்,பிரபாகரும் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி விட்டதால் அவர்களுக்கு வாழ்நாள்தடை அளிக்கப்பட்டாலும் அது அவர்களை பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications