வழக்குகளை விரைந்து முடிக்க விரைவு நீதிமன்றங்கள்
சென்னை:
நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைவில் விசாரித்து முடிவுக்கு கொண்டு வர எல்லா மாநிலங்களிலும் விரைவு நீதிமன்றங்கள்அமைக்கப்பட இருப்பதாக மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
கீழ் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் வழக்குகள் மிக மெதுவாக நடந்து வருகின்றன. பல வழக்குகள் தேங்கி கிடக்கின்றன.வழக்குகளை விரைந்து முடிக்க சோதனை அடிப்படையில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க மத்தியஅரசு முடிவு செய்திப்பதாக மத்திய சட்ட அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார்.
நீதித்துறை சீர்திருத்தம் என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு சென்னையில் சனிக்கிழமை நடந்தது. இதில் மத்திய சட்டஅமைச்சர் அருண்ஜெட்லி,உச்ச நீதிமன்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் கலந்து கொண்டு பேசினர். இந்த கருத்தரங்கிற்கு மத்திய பண்பாடு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம்ஏற்பாடு செய்திருந்தது.
இந்த கூட்டத்தில் அருண்ஜெட்லி பேசியதாவது:
நீதி மன்றங்கள் தேங்கி இருப்பது நமது முன் இருக்கும் பெரிய சவால்.
கீழ் நீதி மன்றங்களில் மட்டும் 2 கோடிக்கும் மேல் வழக்குகள் தேங்கி இருக்கின்றன. உயர் நீதிமன்றங்களில் 34 லட்சம் வழக்குகளும், உச்சநீதிமன்றத்தில் 21 ஆயிரம் வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன.
நாட்டின் மக்கள் தொகையை கணக்கிட்டால் இது சரியானதுதான். உச்ச நீதி மன்றத்தில் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிக வழக்குகள்தீர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கீழ் நீதிமன்றத்தில்தான் அதிமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த எண்ணிக்கையை குறைக்குமாறு அனைத்து மாநில முதல்வர்களுக்கும்.அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் கடிதம் எழுதியிருந்தேன்.
தேங்கியிருக்கும் வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். முதல் கட்டமாக 5 மாவட்டங்களில் சோதனைகட்டமாக அறிமுகப்படுத்தப்படும்.
கீழ் நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகள் இந்த நீதிமன்றத்திற்கு மாற்றி தினமும் விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும் என பேசினார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் பேசியதாவது:
10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் இருக்க வேண்டும் என சட்ட கமிஷன் பரிந்துரை செய்ய வேண்டும். காலியாக இருக்கும் பதவிகள் நிரப்பப்படவேண்டும். கீழ் நீதிமன்ற நீதிபதிகளுக்கு உடனே பதவி உயர்வு அளிக்க வேண்டும்.
தகுதியானவர்களை நீதிபதிகளாகவும், அரசு வக்கீல்களாகவும் நியமிக்க வேண்டும். நீதிபதிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். வக்கீல்கள்வாதங்களுக்கு நேரம் ஒதுக்குவது முறைப்படுத்த வேண்டும். நீண்ட தீர்ப்புகளை நீதிபதிகள் தவிர்க்க வேண்டும். குறிப்பிடப்பட்ட காலக் கெடுவுக்குள்தீர்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என அவர் பேசினார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications