வீரப்பனை வேட்டையாடத் தயார்: நாகப்பா
தார்வார்:
கர்நாடக அரசு அனுமதி கொடுத்தால் அதிரடிப் படையில் சேர்ந்து வீரப்பனைத் தேடத் தயாராக இருக்கிறேன் என்று வீரப்பனிடமிருந்து தப்பித்து வந்தசினிமா உதவி டைரக்டர் நாகப்பா தெரிவித்துள்ளார்.
அவர் தனது சொந்த ஊரான தார்வார் மாவட்டம் மரகதியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
வீரப்பன் எங்களைக் கடத்திய பின், ஒரு அமாவாசை நாளில் எங்கள் அனைவருக்கும் விருந்து கொடுத்தார். அப்போது வீரப்பனிடமிருந்து தப்பித்துச் செல்வதுகுறித்து ராஜ்குமாரிடம் கூறினேன்.
அந்த சமயத்தில் பர்வதம்மா ரேடியோவில் பேசிய செய்தி என்னை மேலும் கலங்க வைத்தது. உடனடியாக வீரப்பனிடமிருந்து தப்பித்துச் செல்ல முடிவு செய்தேன்.
காட்டில் வீரப்பன் என்னை மிகவும் கீழ்த்தரமாக நடத்தினார். ஒவ்வொரு நாளும் எனக்கு ஒவ்வொரு கண்டமாகக் கழிந்தது.
வீரப்பன் எங்களை எப்படி நடத்தினார் என்பது குறித்து ராஜ்குமாரும், நீங்களும் முரண்பாடான கருத்துக்களைத் தெரிவிக்கிறீர்களே என்று கேட்கிறார்கள்.ஆனால் அப்பாவும், மகனும் எப்படி ஒரே மாதிரிப் பேசுவார்கள்?
நான் திட்டமிட்டபடி, வீரப்பனுக்குத் தெரியாமல் தப்பித்து வந்து விட்டேன். நான் சாதாரண மனிதன். போலீஸார் எனக்கு மிகுந்த பாதுகாப்புகொடுத்திருக்கிறார்கள்.
கர்நாடக அரசு அனுமதியளித்தால் நான் கண்டிப்பாகக் காட்டுக்குச் சென்று வீரப்பனைப் பிடிப்பேன். அதற்காக அதிரடிப் படையில் சேரவும் நான் தயாராகஇருக்கிறேன் என்றார் நாகப்பா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications