பொருத்தமற்ற விருதுகள்: சு.சமுத்திரம் வேதனை
கோவை:
காவிய வீரர்களின் பெயர்களில் பொருத்தமற்ற விருதுகளை வழங்குவது வியப்பிற் குரியதாகவும்,முரண்பாடுகள்நிறைந்ததாகவும் உள்ளது என எழுத்தாளர் சு.சமுத்திரம் பேசினார்.
கோவையில் விஜயா பதிப்பகம் ஒரு மாத காலமாக நடத்தி வரும் புத்தகத் திருவிழாவில் பெரும் எழுத்தாளர்கள்கலந்து கொண்டு பேசி வருகின்றனர். இந்த விழாவில் எழுத்தாளர் சு.சமுத்திரம் பேசியதாவது:
மத்திய அரசனாலும் சரி, மாநில அரசானாலும் சரி, ஒருவர் தனது துறையில் முன்னற்றம் கண்டு சாதனை செய்தால்,அவர்களுக்கு விருது வழங்கி கவுரவப்படுத்துவது வரவேற்கக் கூடியதே. ஆனால் இத்தகைய விருதுகளுக்குபொருத்தமற்ற பெயர்களை வைப்பது தான் ஏற்றுக் கொள்ள முடியாததாக உள்ளது.
வேடனுக்கும், இளவரசர்களுக்கும் அம்பு விடுவதில் பயிற்சி அளித்தவர் துரோணாச்சாரியார். ஏகலைவனின்திறமையைக் கண்டு, துரோணாச்சரியார் அவனிடம் தனது பெரு விரலை குரு தட்சணையாகக் கேட்டுப் பெற்றார்.இத்தகைய குருவின் பெயரால், விளையாட்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பெயரால் விருதுகள்வழங்கப்படுகிறது.
இதே போன்று தனக்கு நிகரான திறமை கொண்ட இன்னொருவன் இருக்கக் கூடாது என நினைத்தவர் அர்ச்சுனன்.போர் புரியும் சகல வித்தைகளையும் அறிந்தவன் தான் அர்ச்சுனன். ஆனால், ஒரே திறமையை மட்டும்கொண்டுள்ள விளையாட்டு வீரர்களுக்கு அர்ச்சுனன் பெயரில் விருது என்பது கேலிக் கூத்தாக உள்ளது.
தாழ்த்தப்பட்ட பெண்கள் மாரப்பு போடக் கூடாது என 35 ஆண்டுகளாக இருந்த பழக்கத்தை மாற்றிஅமைத்தவர்கள் வைகுண்டசாமி. வள்ளலார் இவர்கள் பற்றி வரலாற்றில் இடம் பெறவில்லை. இவர்களைப் பற்றிதமிழ் இலக்கியங்களில் இடம் கிடையாது. ஆனால் சங்கராச்சாரியார் பற்றி மட்டும் அனைவருக்கும் தெரியும்.
சமூகம் எதை தருகிறதோ, அதை மேம்படுத்தி வாசகர்களுக்குத் தருவது தான் இலக்கியம். வாசகர்கள் புரிந்துகொள்ளும் படி எழுதுவது தான் இலக்கியம். இதில் தான் இலக்கியத்தின் இலக்கு உள்ளது என்றார்.
விழாவில் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி, விஜயாப் பதிப்பக உரிமையாளர் வேலாயுதம் ஆகியோர்கலந்து கொண்டனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications