புதிய நீதிக்கட்சிக்கு 70 இடங்கள் கிடைக்கும்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

யார் எங்களுடன் கூட்டணி சேர்ந்தாலும்,நாங்கள் தான் தலைமை ஏற்போம், தனித்துப்போட்டியிட்டால் 70 இடங்களில் வெற்றிபெறுவோம் என ஈரோட்டில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி முத்தையாதெரிவித்தார்.

ஈரோட்டில் புதிய நீதிக் கட்சியின் நிறுவனர்ஏ.சி முத்தையா நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:

புதிய நீதிக் கட்சியின் மாநாடு மிகப் பெரியவெற்றியைப் பெற்றுள்ளது.கோவையிலிருந்து ஈரோடு வரை நடந்தஊர்வலம் மிகவும் அமைதியாகவே இருந்துவருகிறது. வருகிற சட்டசபைத் தேர்தலில்புதிய நீதிக் கட்சியின் தலைமையில் ஒருஅணி ஏற்படுத்தப்படும்.

இந்த கூட்டணி மூன்றாவது அணியா,இல்லை முதல் அணியா என்பதுகூட்டணியைப் பொறுத்து அமையும்.திருச்சி, தஞ்சை, திண்டுக்கல் போன்ற தென்மாவட்டங்களில் புதிய நீதிக்கட்சிக்கு 20அமைப்புகள் வலுச் சேர்த்துள்ளன.

தமிழ் தேசம் கண்ணப்பன், திருமாளவன்,வேந்தர் முன்னேற்றக் கழகம், போன்றஅமைப்புகள் எங்களோடு சேர சம்மதம்தெரிவித்துள்ளன.

மூப்பனாருடனும் காங்கிரசுடனும் பேசிவருகிறோம். யார் அங்கம் வகித்தாலும்,இல்லையென்றாலும், புதிய நீதிக் கட்சியின்தலைமையில் கூட்டணி ஆட்சி ஏற்படும்.

எங்களுடன் கூட்டணிக்கு பாட்டாளி மக்கள்கட்சி வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்.பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்ராமதாஸ் சிறந்த அரசியல்வாதி என்பதையாரலும் மறுக்க முடியாது.

தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும்,புதிய நீதிக் கட்சி சுட்டிக் காட்டும்.ஏற்படவிருக்கும் புதியக் கூட்டணிக்குநீதிக்கட்சி தலைமை தாங்கும்.எதிர்காலத்தில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிமட்டுமே அமையும்.

இதுவரை புதிய நீதிக் கட்சி 26 இடங்களில்மாநாடுகளை நடத்தியுள்ளது. இன்னும் 40இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டாலும்,70 இடங்களில் வெற்றி பெறுவோம்.அனைத்து மாநாடுகளையும் நடத்தி முடித்துவிட்டால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துவிடுவோம்.

அனைத்து சமுதாயக் கட்சிகளும் புதிய நீதிக்கட்சிகளை ஏற்றுக் கொண்டுள்ளனர். டிச. 9ம் தேதி ஆயிரம் கிறிஸ்தவர்கள் புதிய நீதிக்கட்சியில் சேர்கின்றனர். நவ. 29 ம் தேதிஆயிரம் அர்ச்சகர்கள் புதிய நீதிக் கட்சியில்சேருகின்றனர்.

தமிழ்நாட்டில் தடி எடுத்தவர்கள் எல்லாம்தண்டல்காரர்களாகி விட்டனர். இதனால்பாதிக்கப்பட்டவர்கள் புதிய நீதிக் கட்சிக்குவந்து கொண்டுள்ளனர். முதலியார்பேரவையாக இருந்ததை விட புதிய நீதிக்கட்சியாக மாறிய பிறகு, இரண்டு மடங்குபலம் அதிகரித்துள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+