தமிழ் பண்பாட்டோடு திருமணம் செய்யுங்கள்: கருணாநிதி
சென்னை:
தமிழர் உணர்வுள்ள தமிழர்கள் எல்லோரும் தமிழர் பண்பாட்டு முறையில் திருமணம் நடத்த வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ் உணர்வு உள்ள தமிழர் எல்லோரும் தமிழர் பண்பாட்டு முறையில் திருமணம் நடத்த வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்மூர்த்தி வீட்டு இல்லத் திருமண விழாவில் பேசிய கருணாநிதி இந்தக் கருத்தை தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மூர்த்தியின் மகன் அன்பு சோழனுக்கும், நாகப்பட்டினம் மாவட்டத்தின் திருப்புவகலூரைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் மகள்சுதா காயத்ரிக்கும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது. அந்த திருமணம் தமிழக முதல்வர் தலைமையில் நடந்தது.
அந்த திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் பேசினார். அவர் பேசுகையில், தமிழகத்தில் இருக்கும் பல மாவட்ட ஆட்சி தலைவர்களில் மிகச் சிலரே சிறந்தமுறையில் பணியாற்றுபவர்கள். அவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர் மூர்த்தி.
அவருக்கு இயல்பாகவே சமூக அக்கறை உண்டு. அவருக்கு மக்களிடத்தில் அன்பும், அக்கறையும் உள்ள காரணத்தால் தன் கடமைகளை செய்தால் மட்டும்போதும் என்று இல்லாமல் மிகுந்த அக்கறையோடு செய்து வருகிறார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது மூர்த்தி அவருக்கு உதவியாளராக இருந்தார். எம்.ஜி.ஆரிடம் பணியாற்றியவர் நம்மிடம்விசுவாசமாக இருப்பாரா என நான் யோசிக்க வில்லை. அவர் மீது நான் நம்பிக்கை கொண்டிருந்தேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை.
நம்மிடம் இருந்த பலர் விசுவசாம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பிறரிடமிருந்து நம்மிடம் வந்தவர்கள் விசவாசமாக, அன்போடு இருக்கிறார்கள்.இதற்கு மூர்த்தி சிறந்த உதாரணம்.
திருச்சி மாவட்டத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளில், அதிலும் குறிப்பாக மாவட்ட ஆட்சி தலைவர் கூட்டங்களில் அரசு சார்பில் மூர்த்தியை பாராட்டிபேசியிருக்கிறேன்.
அந்த பாராட்டை விட சிறந்த பாராட்டை பெற அவர் தன் இல்லத் திருமணத்தை தமிழர் பண்பாட்டு முறையில் நடத்துகிறார். இது போன்ற தமிழ் உணர்வுதமிழர் அனைவருக்கும் வர வேண்டும் என கூறி மணமக்களை வாழ்த்துகிறேன் என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications