பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழகத்தில் பாதுகாப்பு
சென்னை:
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6ம் தேதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை, மதுரை, திருச்சி, சேலம் உள்பட முக்கிய நகரங்களில் சிறப்பு பாதுகாப்புக்கள் செய்யப்பட்டுள்ளன. ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர். பயணிகளின் உடமைகள் சோதிக்கப்படுகின்றன.
ரயில் பயணிகளின் பெட்டிகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்படுகின்றன. ரயில் பாலங்கள், கோவில்கள், பிற மத வழிபாட்டுத் தலங்களில்சிறப்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு சமூக விரோதிகள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
லட்சக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவையில் மிக பலத்த பாதுகாப்பு:
1996 ம் ஆண்டு குண்டு வெடிப்பு நடந்த கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கோவையில், ரயில் நிலையங்களில் ஆயுதம் தாங்கிய போலீசார் மற்றும் மோப்ப நாய்கள் மூலம் பயணிகள் தீவிரமாக சோதனை செய்யப்பட்ட பிறகேரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப் படுகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 6ம் தேதி, பல இடங்களில் ரயில்களில் குண்டு வெடித்தது. இதனையொட்டி முன் எச்சரிக்கை ஏற்பாடாக இந்தமுறை ரயில் நிலையங்களில் கண்காணிப்பு காமிரா நிறுவப்பட்டது.
அதி நவீன ஆயுதங்கள், குண்டுகளைக் கண்டறியும் கருவிகள் ஆகியவையும் பயன் படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் ஒவ்வொரு ரயிலிலும் பாதுகாப்பிற்காக 20 போலீசார் அனுப்பப்பட்டு வருகின்றனர். இவர்கள் ஓடும் ரயிலில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். ரயில்வே பாலங்களில் ஆயுதம் தாங்கிய போலீசார் காவல் இருந்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications