டிச.6 ல் வன்முறைச் சம்பவம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு
சென்னை:
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான வரும் டிசம்பர் ஆறாம் தேதி அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ்பாதுகாப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னைக்கு வந்து செல்லும் அனைத்து ரயில்களிலும் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீஸார் கண்காணிப்பில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எழும்பூர் மற்றம் சென்ரல் ரயில் நிலையங்களில் போலீஸார் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை பரிசோதிக்கதுவங்கியுள்ளனர்.
மேலும் மோப்ப நாய்கள் ரயில் நிலைய ப்ளாட்பாரங்களில் சுற்றி வருகின்றன. இதன் மூலம் தீவிரவாத செயல் தடுப்பு நடவடிக்கைமுடுக்கிவிடப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுமார் 500 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களை தவிர தொண்டு நிறுவனங்களை சேர்ந்த சுமார் 500பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தைப் பொறுத்தவரையில் நிலையத்திற்குள் செல்லவும் வெளியே வரவும் பல்வேறு வழிகள் உள்ளன.
இவை அனைத்தும் தற்பொழுது மூடப்பட்டுள்ளன. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு உள்ளே செல்லவும் வெளியே வரவும் ஒரே ஒரு வழி மட்டுமேதற்காலிகமாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு அதன்படி செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு முக்கிய இடங்களில் ஏற்கனவே போலீஸார் தீவிரமாக கண்காணிப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் பஸ் நிலையங்கள், மத வழிபாட்டுத்தலங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், கல்லூரிகள்,பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications