சேலத்தில் குடும்பமே கிணற்றில் குதித்துத் தற்கொலை
சேலம்:
கடன் தொல்லையாலும், வறுமையாலும் வாடிய பெண், தனது இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைசெய்து கொண்டார்.
சேலம் மாவட்டம், பெரியா புதூரைச் சேர்ந்தவர் குமாரசாமி (35). இவர் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார்.இவரது மனைவி இந்திராணி (27). இவர்களுக்கு மோகனா (9), சத்யா (7), பரமசிவம் (5) என்ற மூன்றுகுழந்தைகள் இருந்தனர்.
இந்நிலையில் தையல் கடையில் வரும் வருமானம் போதுமானதாக இல்லை. இதனால் குமாரசாமிக்கும்இந்திராணிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் இந்திராணி, தனது தாய் வீட்டிற்கு வந்தார்.
அங்கு தங்கியிருந்த அவர், தனது மகன் பரமசிவத்தை விட்டு விட்டு, தனது இரு மகள்களையும், அழைத்துச்சென்றார். பின்னர், இரு மகள்களையும் சேலையால் தன்னுடன் கட்டிக் கொண்டார். காலில் கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்தார். இதில் மூவரும் இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications