பா.ம.க.வை ஜெ சேர்க்க மாட்டார்: திருமாவளவன்
சென்னை:
அ.தி.மு க. கூட்டணியில் டாக்டர் ராமதாஸை ஜெயலலிதா சேர்த்துக் கொள்ள மாட்டார் என்று விடுதலை சிறுத்தைகள் இயக்க அமைப்பாளர்திருமாவளவன் கூறியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் அமைப்பாளர் திருமாவளவன் சென்னையில் நிருபர்களை சந்தித்தார்.
வருகின்ற தேர்தலில், அ.தி.மு.க.வுக்கு பா.ம.க செல்வதாக டாக்டர் ராமதாஸே வதந்தியைப் பரப்பி வருகின்றார். டாக்டர் ராமதாஸை கூட்டணியில்சேர்க்க, ஜெயலலிதா ஒன்றும் அரசியல் விவரம் தெரியாதவர் அல்ல.
முதல்வர் கருணாநிதிக்கும், டாக்டர் ராமதாஸூக்கும் கூட்டணி தொடர்பாக உள்ள சண்டையில் ஒரு அறிக்கையை தயார் செய்தார்கள்.
அந்த அறிக்கையை முதல்வர் கருணாநிதி, மூப்பனார், கம்யூனிஸ்ட் தலைவர்கள் மற்றும் பல கட்சித் தலைவர்களிடம் அவர்கள் சமர்பித்தார்கள்.
ஆனால் கடைசிவரை அவர்கள் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை. தனது கூட்டணியில் பா.ம.க.வை ஜெயலலிதா சேர்த்துக் கொள்ள மாட்டார்.
எங்களை தேவையில்லாமல் ராமதாஸ் வம்புக்கு இழுத்து வருகிறார். ராமதாஸை கூட்டணியில் சேர்த்தால் தோல்வி ஏற்படும் என்று ராமதாஸைவெளியேற்ற கருணாநிதி ஏற்பாடு செய்துவிட்டார்.
டாக்டர் ராமதாஸை அங்கீகரிக்க ஜெயலலிதா தயாராக இல்லை. அ.தி.மு.கவுக்கு பா.ம.க. வர நூறு சதவீதம் வாய்ப்பே இல்லை.
தன் மகனுக்கு டாக்டர் ராமதாஸ் முக்கியத்துவம் கொடுப்பதால், உள் கட்சியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்தப் பிரச்சனையை திசை திருப்ப என் மீதுகுற்றச் சாட்டுகளை அள்ளி வீசுகிறார்.
திருமாவளவன் தான் நமது எதிரி என்று அவர் பிரச்சாரம் செய்கிறார். வன்னிய சமுதாய மக்கள் அவரிடம் ஏமாற மாட்டார்கள். தேர்தல் நேரத்தில்டாக்டர் ராமதாஸ் தான் கலவரம் ஏற்படுத்துவார்
மற்ற கட்சிகள் கள்ள ஓட்டு போடுவார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால் பா.ம.க.வினர் மட்டும் தான் வாக்குச் சாவடியையேசூறையாடுவார்கள். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications