புலிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுங்கள்: வைகோ
சென்னை:
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக தமிழ் அறிஞர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று சென்னையில் நடந்ததிருக்குறள் மாநாட்டில் வைகோ பேசினார்.
கோயிலூர் ஆதீனம் நடத்தும் திருக்குறள் மாநாடு சென்னை ஜெர்மன் அரங்கில் நடைபெற்றது. விழாவில் இனநலம்ஏமாப்புடைத்து என்ற தலைப்பில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.
2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலை இப்பொழுது இல்லை. தமிழ் இனத்திற்கு பாதுகாப்பு ஏற்படுத்திகொடுப்பது எப்படி? என்று பார்க்க வேண்டும். இன நிலம் என்று சொல்கின்ற போது, உலகில் மூத்த இனம் தமிழ்இனம். தன் உரிமைக்காக போராடுகிறது.
அது கடல் கடந்து போராடினால் என்ன? எங்கே போராடினால் என்ன? பூர்வீகம் தமிழகம் தான். கடல் எல்லைநம்மைப் பிரித்தாலும் தொப்புள் கொடி உறவை பிரிக்க முடியாது. இந்த உணர்வுகளை யாராலும் வீழ்த்த முடியாது.ஈழத்தில் சகோதர சகோதரிகள், குழந்தைகள் கொல்லப் படுகிறார்கள். அவர்களை காப்பாற்றுவதற்காவே ஆயுதம்தூக்கியிருக்கிறார்கள்.
இஸ்ரேல், பாகிஸ்தான், ரஷ்யா, சீனாவிடம் இருந்து எல்லாம் ஆயுதங்களை வாங்கி சிங்கள அரசு குவித்துள்ளது.இத்தனை நாட்டு ஆயுதங்களை தமிழர்கள் எதிர்த்து போராடுகிறார்கள்.
உலகில் நாதியற்றவனாக விளங்கும் ஒரு இனம் அழிக்கப்படுகின்ற பொழுது குரல் கொடுக்க வேண்டாமா?சாவகச்சேரியில் பல கட்டிடங்கள் தரை மட்டமாகி விட்டது. தமிழர்களின் புராதன நகரமான யாழ்பாணத்திற்கும்அந்த நிலை ஏற்பட்டு விடக் கூடாது.
தமிழர்கள் நலன் காவு கொடுக்கப்பட போடப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்துத் தான் தனி ஈழமே தீர்வு என்று தந்தைசெல்வா தீர்மானம் போட்டார்.
அதன் அடிப்படையில் தான் போராடுகிறார்கள். அலை கடல்களுக்கு அப்பால் இருந்தாலும் அந்த இனம் தமின்இனம் அல்லவா? தங்கள் இனத்தை காப்பாற்ற போராடுகிறவர்களுக்கு அரண் அமைத்து கொடுப்பது தமிழர்கடமை.
தமிழ் அறிஞர்கள் நாடெங்கும் இந்தச் செய்தியை சொல்ல வேண்டும். இருள் விலகும், வெளிச்சம் பிறக்கும்.ஈழத்தில் அடிமை விலங்கு உடைக்கப்படும். தமிழ் இனம் அதற்கு அரண் அமைக்கும். தமிழ் ஈழம் ஒன்று தான்அவர்களை வாழ்விக்கும்.
காலத்திற்கும் நேரத்திற்கும் ஏற்ப கருத்துக்களை மாற்றிக்கொள்பவன் நான் இல்லை. விடுதலைப் புலிகள்இயக்கத்திற்கு உள்ள தடை நீக்கப்பட வேண்டும்.
அவர்கள் தூக்கிய விடுதலை தீபம் எந்தச் சூறாவளியிலு ம் அணையாது. அதற்கு ஆதரவு கொடுப்பது எங்கள்உரிமை. ஈழ விடுதலை போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுக்கும் கருத்தை சொல்ல எங்களுக்கு உரிமை உண்டு.
பாலசிங்கத்துக்கு வைத்தியம்:
இரண்டு சீறு நீரகங்களும் பாதிக்கப்பட்ட பாலசிங்கத்துக்கு நார்வே அரசு முழு வைத்தியம் செய்தது. அந்ததமிழனை, ஒரு தமிழன் என்ற உணர்வோடு நான் பார்த்தது தவறு என்கிறார்கள். மீண்டும் வாய்ப்புக் கிடைத்தால்பார்ப்பேன்.
ஜெனிவாவில் போய் தமிழ் ஈழம் மலர வேண்டும் என்று நான் பேசினேன். சிங்களர்கள் வெற்றி பெற நாடுகள்ஆயுதம் கொடுத்து உதவுகின்ற போது, என் இனத்துக் காரர்கள் வெற்றி பெற நான் குரல் கொடுக்கக் கூடாதா?விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இங்குள்ள தடை அகற்றப்பட வேண்டும் என்ற கருத்தில் எந்த மாற்றமும்இல்லை.
என் உதிரத்தில், உணர்வில் உள்ள இந்த கருத்தை மறைத்து விட்டு அரசியல் நடத்த நான் விரும்பவில்லை.தமிழறிஞர்களாகிய நீங்கள் பொங்கி எழுந்து வாருங்கள்.
உழைக்கும் கூட்டமொழியான தமிழ் மொழி மாற வேண்டும் என்ற இந்த தீர்மானத்தை கட்சி சார்பில்வரவேற்கின்றேன். ஈழ விடுதலை போராட்டத்தில் நீங்கள் அனைவரும் ஆதரவாக நில்லுங்கள் என்றுவேண்டுகிறேன் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications