சென்னை: ஜம்முதாவி எக்ஸ்பிரசில் பயங்கர வெடிகுண்டு
சென்னை:
ஜம்முவிலிருந்து சென்னை வந்த ரயிலில் சக்திவாய்ந்த வெடிகுண்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக வெடிக்காமல் இருந்ததால் பயணிகள் அனைவரும் உயிர்தப்பினர். அது ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டா அல்லது நாட்டு வெடிகுண்டாஎன்பது குறித்துப் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அயோத்தியில் பாபர் மசூதி கடந்த 92 ம் வருடம் டிசம்பர் 6 ம் தேதி இடிக்கப்பட்டது. இதன்பின் டிசம்பர் 6 ம் தேதியை கருப்பு தினமாக முஸ்லீம்கள்கடைபிடித்து வருகிறார்கள்.
மேலும் ஒவ்வொரு வருடமும், டிசம்பர் 6 ம் தேதி பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் என்று ஆங்காங்கே வெடிகுண்டுகள் வெடிக்கத் துவங்கின.
புதன்கிழமை டிசம்பர் 6 ம் தேதி என்பதால் தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே சென்னை வந்த ரயிலில் பயங்கர வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னைக்கும், காஷ்மீர் மாநிலம் ஜம்முவுக்கும் இடையே வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் மிகவும் தாமதமாக வந்துசேர்ந்தது.
பயணிகள் ரயிலிலிருந்து இறங்கிச் சென்ற பின் பேசின் பிரிட்ஜ் பகுதியில் ரயில் சுத்தப்படுத்தப்பட்டது.
ரயிலின் 9 வது பெட்டியை சுத்தப்படுத்தும்போது அதன் அடியில் பார்சல் ஒன்று இருந்தது தெரிய வந்தது. உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல்கொடுக்கப்பட்டது.
வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு வந்தனர். அப்போது அது வெடிகுண்டுதான் என்று கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த குண்டு வெடித்திருந்தால் ஏராளமான பயணிகள் பலியாகியிருப்பர். வெடிகுண்டைக் கண்டு பிடித்ததும் ரயில்களில் பாதுகாப்பு இன்னும்தீவிரமாக்கப்பட்டுள்ளது.
பார்சல் அனுப்பத் தடை:
இதையடுத்து ரயில்களில் பார்சல் அனுப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ரயில் நிலையங்களில் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications