எங்களுக்கு இளங்கோவன் தான் வேணும்
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று 12 முன்னாள்எம்.பி.க்களும் 27 முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் சோனியாவுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
தற்போது தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக இளங்கோவன் இருக்கிறார். அவரே கட்சியில் தொடர்ந்து நீடிக்கவேண்டும். ஏனெனில் அவர் ஒருவரே மிகச் சிறந்த எதிர்கட்சித் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
மக்கள் விரோதக் கொள்கைக்கு எதிராகப் போராட்டம்:
மக்கள் விரோதக் கொள்கையைக் கண்டித்து அவர், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராகப் பலமுறை பலபோராட்டங்கள் நடத்தியிருக்கிறார்.
சமீபத்தில் ஈரோட்டில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதற்கு மத்திய உள்துறை அமைச்சர்அத்வானி வந்திருந்தார்.
அப்போது மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்கள் விலையை உயர்த்தியது குறித்துப் போராட்டம் நடத்தியவர்இளங்கோவன். பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று தமிழககாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தலைமையில் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது.
இளங்கோவன் பதவியில் தொடர்ந்து நீடிக்கப்பட்டால், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்குமுழுவிதமான ஒத்துழைப்பை நல்கவும் தாங்கள் தயாராக இருப்பதாக அவர்கள் அந்த மனுவில்குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனுவில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களான பிரபு, அடைக்கலராஜ்,மரகதம் சந்திரசேகர், பேராவூரணி. ஆர். சிங்காராம், பலராமன், லதா பெரியகுமார், காலன், யசோதா மற்றும் பலர்இந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
இளங்கோவனுக்கு எதிர்ப்பு:
முன்னதாக, குமரி அனந்தன், தங்கபாலு உள்பட பலர் இளங்கோவனை தமிழக காங்கிரஸ் தலைவர்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று டெல்லிக்குச் சென்று சோனியா காந்தியை நேரில் சந்தித்துக் கேட்டுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications