கோவையில் கோளாறால் தரையிறங்கிய ஹெலிக்காப்டர்
கோவை:
விமானப் படை ஹெலிகாப்டர் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக வயல்வெளிப் பகுதியில் தரையிறங்கியது.திடீரென ஏற்பட்ட கோளாறால், அவசரமாகத் தரையிறங்கிய ஹெலிகாப்டர் விபத்தில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாகவீரர்கள் உயிர் தப்பினர்.
கோவை அருகே ராணுவ விமானப் படையின் பயிற்சிப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த விமானப் படைத்தளத்திலிருந்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
வழக்கம் போல ராணுவ வீரர்கள் நான்கு பேர் எம். ஐ 8 ரக ஹெலிகாப்டரில் பயிற்சி பெற்றனர். அப்போது திடீரெனஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டது. இந்தக் கோளாறை அறிந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த விமானப் படைவீரர்கள், கோவை பல்லடம் ரோட்டில் உள்ள வெங்கிட்டாபுரம் என்ற இடத்தில் ஹெலிகாப்டரைப் பத்திரமாகத்தரையிறக்கினர்.
பின்னர், ஹெலிகாப்டர் பழுதடைந்தது குறித்து சூலூர் விமானப் படைத் தளத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அங்கிருந்து வேறு ஒரு ஹெலிகாப்டர் மூலம் இன்ஜினியர்கள் வந்து கோளாறை சரி செய்தனர். தரையிறக்கப்பட்டஹெலிகாப்டரில் டேங்க்கில் 2000 ஆயிரம் லிட்டருக்கும் மேற்பட்ட எரிபொருள் இருந்தது. இந்தக் கோளாறு சரிசெய்யப்படாமல் இருந்திருந்தால், பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.
விமானப்படை வீரர்கள் சமயோசிதத்துடன் செயல்பட்டதால், இந்த விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும், இந்தஹெலிகாப்டரை பொதுமக்கள் பெருமளவில் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications