ரயில் நிலையத்தில் டிபன்பாக்ஸ் ஏற்படுத்திய பரபரப்பு
சென்னை:
சென்னை வந்த ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் ரயிலில் சப்பாத்தி வைக்கப்பட்ட டிபன்பாக்ஸால் பயணிகள் இடையே வெடிகுண்டு பீதி ஏற்பட்டது.
கடந்த திங்கள்கிழமை பிற்பகல் சென்னை வந்த ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பெட்டியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு சிக்கியது.
தக்க சமயத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு இந்த வெடிகுண்டு செயல் இழக்க வைக்கப்பட்டதால் நடக்கவிருந்த பெரும் விபத்துதடுக்கப்பட்டது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் செவ்வாய்க்கிழமை சென்னை வந்த ரயிலில் வெடிகுண்டு இருப்பதாகப் புரளி கிளம்பியது.
இதையடுத்து, பயணிகள் அனைவரும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கிய பிறகு போலீஸாரும், வெடிகுண்டு நிபுணர்களும் ஒவ்வொரு பெட்டியாகசோதனை செய்தனர்.
அப்போது 4 வது பெட்டியில் ஒரு ரெக்சின் பை கிடந்தது. அதில் வெடிகுண்டு இருக்குமோ என்று போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதற்கிடையே இதுபற்றி கேள்விப்பட்டதும் ரயில் நிலையத்தில் நின்ற பயணிகள் அந்த பெட்டி அருகே கூடி விட்டனர். இதனால் பரபரப்பான நிலைகாணப்பட்டது.
பின்னர் அந்த ரெக்சின் பையை அவர்கள் சோதனை செய்து பார்த்தனர். அப்போது அதில் டிபன்பாக்ஸ் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
அந்த டிபன்பாக்சில் 60 சப்பாத்திகளும், குருமாவும் இருந்தது. யாரோ பயணி ஒருவர் அந்த ரெக்சின் பையை ஞாபக மறதியாக விட்டுச் சென்றுஇருக்கலாம் என்று தெரிய வந்தது.
-
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications