கரூர் நீலக்கல்லுக்கு பெங்களூர் வியாபாரிகளிடம் மவுசு
கரூர்:
கரூர் அருகே நீலக்கற்களை விலை கொடுத்து வாங்க மும்பை, பெங்களூர் வியாபாரிகள் முகாமிட்டு வருகின்றனர்.அடுத்தவர் நிலத்தில் நீலக்கல்லைத் தோண்டி எடுத்து விற்பனை செய்ய முயன்ற வியாபாரியைப் போலீசார் கைதுசெய்தனர்.
கரூர் மாவட்டத்தில் கோட்டப்புலிப்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ராமசாமிக் கவுண்டர்என்பவரது மகன் பெருமாள் (42). இவரது தாயாருக்குச் சொந்தமான நிலத்தில் ஒரு கும்பல் நள்ளிரவில் வேனில்வந்திறங்கியது. நாகராஜ் என்ற வியாபாரி சுமார் 30 ஆட்களுடன் வந்து நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தனர்.
இது குறித்து பெருமாளிடம் எவ்வித அனுமதியும் பெறவில்லை. எனவே, இது குறித்த தகவல் அறிந்த பெருமாள்,போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இந்த புகாரை அறிந்த கும்பல் தப்பி ஓடியது. வியாபாரி நாகராஜ் மட்டும்போலீசாரிடம் மாட்டிக் கொண்டார். அவரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் கோட்டப்புலிப்பட்டி , காணியாளம்பட்டி உள்பட பல இடங்களில் பல மடங்கு விலை மதிப்புமிக்க நீலக்கற்கள் கிடைப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து இந்தக் கற்களை விலை கொடுத்து வாங்க மும்பை மற்றும் பெங்களூரிலிருந்து ஆட்கள் வருகைதந்தனர். இவர்கள் கரூரில் முகாமிட்டு இதனை வாங்கிச் செல்கின்றனர்.
இதனால் இந்தப் பகுதியில், கற்களை பாதுகாக்கவும், உரிய அனுமதியின்றி தோண்டுபவர்களையும் கனிமவளத்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications