மசூதி இடிப்பு தினம்: சென்னையில் அமைதி போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாபர் மசூதி இடிக்கப்பட் நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் அமைதி ஊர்வலம் புதன்கிழமைநடைபெற்றது.

1992-ம் ஆண்டு அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும்டிசம்பர் மாதம் 6-தேதியன்று ஊர்வலங்கள், போராட்டங்கள் நடப்பது வழக்கம்.

இந்த ஆண்டும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான புதன்கிழமையன்று சென்னையில் முஸ்லிம் முன்னேற்றகழகத்தினரால் அமைதி ஊர்வலம் நடந்தது.

இது குறித்த போலீசார் தெரிவித்ததாவது:

தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சுமார் 2000 பேர் ஜார்ஜ் டவுன் பகுதியிலிருந்து சென்னைசென்ட்ரல் அருகே இருக்கம் பார்க்டவன் தபால் நிலையம் வரை ஊர்வவமாக சென்றனர். பார்க்டவுன் தபால்நிலையம் முன் அமைதிப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்திய தேசிய லீக்கின் தலைவரும் எம்.எல்,ஏ.வுமான அப்துல் லத்தீப் தலைமையில் அவரது ஆதரவாளர்கள்சென்னையில் வடக்கே, பாரிமுனைக்கு அருகே உள்ள ராஜாஜி சாலையில் தர்ணாவில் ஈடுபட்டனர். அ.தி.மு.க.,த.மா.கா. கட்சித் தொண்டர்களும் இதில் பங்கு கொண்டனர்.

தமிழ்நாடு முஸ்லிம் யுனைட்ெ ஜமாத் இஸ்லாம் அமைப்பினர் த.மா.கா. எம்.எல்.ஏ. ஹாரூன் தலைமையில் மாநிலவிருந்தினர் மாளிகை முன் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+