அயோத்தி கோவில் ஒரு தேசிய உணர்வு: வாஜ்பாய்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

அயோத்தியில் கோவில் கட்டுவது ஒரு முடிக்கப்படாத பணியாகும். அங்கு கோவில் கட்டுவது என்பது ஒரு தேசிய உணர்வாகும் என பிரதமர் வாஜ்பாய்நாடாளுமன்றத்தின் வெளியே புதன்கிழமை நிருபர்களிடம் கூறினார்.

இதனால் பெரும் அரசியல் புயல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்எஸ்எஸ் இயக்கத்திலிருந்து வந்தாலும், தன்னை ஒருமதச்சார்பற்றவராகவே காட்டி வந்தார் வாஜ்பாய்.

இதனால்தான் அவரை கருணாநிதி, ஜார்ஜ் பெர்னான்டஸ், மம்தா பானர்ஜி போன்ற மதசார்பற்ற அரசியல் பிரிவினரும் ஆதரித்தனர். இப்போது பிரதமரின்இந்தப் பேச்சுக்கு கருணாநிதி, பெர்னான்டஸ் போன்றவர்களும் பதிலளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பொறுப்பேற்று அத்வானி உள்பட மத்திய அமைச்சர்கள் 3 பேர் பதவி விலக வேண்டும் என்றஎதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க முடியாது.

அயோத்தியில் கோவில் இடிக்கப்பட்டதற்கு அத்வானி காரணமல்ல. கோவிலை இடிக்க வேண்டாம் என்றுதான் அத்வானி கூறி வந்தார்.

இப்பிரச்சனையில் தங்களது கோபத்தைக் காட்டுவதற்காகத்தான் அங்கு அத்வானியும், மற்றவர்களும் கூடினர். ஆனால் கர சேவகர்களை அவர்களால்தடுத்து நிறுத்த முடியவில்லை. இதில் அவர்களது தவறு ஏதுமில்லை.

அதே போல் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது இன்னும் முடிக்கப்படாத பணி. அங்கு ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது இந்தியாவில்வாழும் அனைத்து மக்களின் விருப்பமாகும் என்றார் வாஜ்பாய்.

1992 ம் வருடம் இதே தினத்தில் தான் ( டிசம்பர் 6) பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் மதக் கலவரம் வெடித்தது.

மசூதி இடிக்கப்பட்ட இதே தினத்தில் வாஜ்பாய் பேசியுள்ள இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+